நிவ்யோர்க் நகர அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகியதோடு 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத் தீ விபத்து குறித்து நிவ்யோர்க் நகர மேயர் பில் டே பிளாசியோ கூறும்போது,

"நிவ்யோர்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலியானவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். நியூயார்க் நகரில் கடந்த வருடங்களில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தாக இது கருதப்படுகிறது. இத் தீ விபத்தில் பலியானவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்வோம்." என்றார்.