இந்­தி­யாவில்  இள­மாணி மற்றும் முது­மாணி  பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்ள இலங்கை மாண­வர்­க­ளுக்கு  புல­மைப்­ப­ரிசில் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக கொழும்பில் உள்ள  இந்­திய தூத­ரகம் அறி­வித்­துள்­ளது. 

ஐ.சி.சி.ஆர் புல­மைப்­ப­ரிசில் 2018–19 கல்­வி­யாண்டில் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. நேரு ஞாப­கார்த்த  புல­மைப்­ப­ரிசில் திட்­டத்தின் மூலம் 100 புல­மைப்­ப­ரிசில்  வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இள­மா­ணிப்­பட்­டப்­ப­டிப்­பாக  மருத்­துவம் தவிர்ந்த பொறி­யியல், விஞ்­ஞானம், வர்த்­தகம்,  பொரு­ளா­தாரம், முகா­மைத்­துவம் மற் றும் கலை ஆகிய  துறை­களில் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

மௌலானா அஸாட்  புல­மைப்­ப­ரிசில் திட்­ட­மாக  50 புல­மைப்­ப­ரிசில் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. முது­மா­ணிப்­பட்­ட­மாக  பொறி­யியல், விஞ்­ஞானம், பொரு­ளா­தாரம், வர்த்­ தகம், கலை ஆகிய துறை­களில் வழங்­கப்­ப­டு­கின்­றன. 

ராஜீவ் காந்தி புல­மைப்­ப­ரிசில் திட்­டத்தின் மூலம் 25 புல­மைப்­ப­ரிசில்  இள­மா­ணிப்­பட்­டத்­துக்கு  தகவல் தொழில்­நுட்பம், பொறி­யியல் தொழில்­நுட்பம் ஆகிய துறை­களில் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. 

இந்­தி­யாவில் உள்ள சிறந்த  பல்­க­லைக்­க­ழகம்  மற்றும்  கல்வி நிறு­வ­னங்­களில் கல்­வி­கற்க உயர்­கல்வி அமைச்சின்  துணை­யுடன் இந்­திய அர­சாங்கமே  இலங்கை மாண­வர்­களை  தெரிவு செய்யும். 

gov.lk  எனும்  இணை­யத்­த­ளத்தில் இருந்து விண்ணப்பப்படிவம்  தரவிறக்கப்பட முடி யும். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கு 15.01.2018  இறுதி நாளாகும்.