கொமர்ஷல் வங்கி அதன் 261ஆவது கிளையை அண்­மையில் கொலன்­னாவை புற­நகர் பிர­தே­சத்தில் திறந்து வைத்­துள்­ளது.

கொழும்பின் வட­கி­ழக்கு புற நகர் பகு­தியில் தனது நிலையை ஸ்திரப்­ப­டுத்தும் வகையில் இந்தக் கிளை திறக்­கப்­பட்­டுள்­ளது.

இலக்கம் 194, கொலன்­னாவை வீதி கொலன்­னாவை எனும் முக­வ­ரியில் இந்தப் புதிய கிளை அமைந்­துள்­ளது. இந்தக் கிளையில் ATM இயந்­திரம், பண மீள்­சு­ழற்சி இயந்­திரம் காசோலை வைப்பு இயந்­திரம், இணை­ய­வழி வங்கி இயந்­திரம் ஆகிய வச­தி­க­ளுடன் 24 மணி­நே­ரமும் வங்கிச் சேவை­களைப் பெற்றுக் கொள்ளும் வசதி செய்­யப்­பட்­டுள்­ளது. 

கொமர்ஷல் வங்கி தலைவர் தர்மா தீர­சிங்க இந்தப் புதிய கிளையை சம்­பி­ர­தா­யப்­பூர்­வ­மாகத் திறந்து வைத்தார்.

ஏழு வரு­டங்­க­ளாக தொடர்ந்து உலகின் தலை­சி­றந்த ஆயிரம் வங்­கிகள் வரி­சையில் இடம்­பி­டித்­துள்ள இலங்­கையின் ஒரே­யொரு வங்­கி­யான கொமர்ஷல் வங்கி நாடு முழு­வதும் 741 ATM வலை­ய­மைப்­புக்­க­ளு­டனும் செயற்­ப­டு­கின்­றது.