19 வயதிற்குட்பட்டோருக்கான ஐ.சி.சி. உலகக் கிண்ணம் கமிந்து தலைமையில் இளம் இலங்கை

Published By: Priyatharshan

29 Dec, 2017 | 10:33 AM
image

2018ஆம் ஆண்டு நியூ­ஸி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள 19 வய­திற்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலை­வ­ராக கமிந்து மெண்டிஸ் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். 

ஐ.சி.சி.யினால் நடத்­தப்­படும் 19 வய­திற்­குட்­பட்­டோ­ருக்­கான இளையோர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் எதிர்­வரும் 2018-ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நியூ­ஸி­லாந்தில் ஆரம்­ப­மா­கின்­றது. 

இந்தத் தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்­கு­பற்­று­கின்­றன. அந்­த­வ­கையில் இலங்கை அணி 'டி' பிரிவில் இடம்­பெற்­றுள்­ளது.

அந்தப் பிரிவில் இலங்கை அணி­யுடன் ஆப்­கா­னிஸ்தான், அயர்­லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம்­பெற்­றுள்­ளன.

இலங்கை அணி தனது முதல் போட்­டியில் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 14ஆம் திகதி அயர்­லாந்து அணியை எதிர்த்­தா­டு­கின்­றது.

இளம் இலங்கை அணியை வழி­ந­டத்தும் பொறுப்பு வலது மற்றும் இடது கைகளால் மாறி மாறி பந்துவீசக்கூடிய சுழற்­பந்து வீச்­சா­ளரும் துடுப்­பாட்ட வீர­ரு­மான கமிந்து விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. 

கடந்த 2016இ-ல் நடை­பெற்ற 19 வய­திற்குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான ஆசியக் கிண்ணத் தொட­ரிலும் விளை­யா­டி­யுள்ள மெண்டிஸ் அதில் 156 ஓட்­டங்கள் எடுத்­த­தோடு 5 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தி­யி­ருந்தார்.

கமிந்து தலை­மை­யி­லான இலங்கை அணி வீரர்கள் விவரம் வரு­மாறு,

கமிந்து மெண்டிஸ் (தலைவர்) தனஞ்­செய, சந்துஸ் குண­தி­லக, ஹசித பொயா­கொட, நவி­னிது பெர்னாண்டோ, நிபுன் தனஞ்­செய, அஷேன் பந்­தரா, கிஷன் சஞ்­சுல, நிஷன் மதுஷ்க, ஜிஹான் டேனியல், பிரவீண் ஜெயவிக்ரம, திஷாரு ராஷ்மிக, கலன பெரேரா, நிபுன் மலிங்க, ஹரேன் புத்தில.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41