ஐந்து தினங்­க­ளாக உயி­ருக்கு போரா­டிய நிலையில் சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வந்த காட்டு யானை நேற்று அட்­டா­ளைச்­சேனை அஷ்ரஃப் நகர் பிர­தே­சத்தில் உயி­ரி­ழந்­துள்­ள­தாக வன விலங்கு திணைக்­கள அதி­கா­ரிகள் தெரி­வித்த னர்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அட்­டா­ளைச்­சேனை பிரதேச செய­ல­கத்­திற்­குட்பட் அஷ் ரஃப் நகர் பிர­தே­சத்தில் ஒவ்­வாத பொருட்­களை உட்­கொண்­டதால் சுக­வீ­ன­முற்று உயி­ருக்­காக போராடிக் கொண்­டி­ருந்த காட்டு யானைக்கு வன விலங்குத் திணைக்­கள அதி­கா­ரிகள், மிருக வைத்­திய அதி­கா­ரிகள் இணைந்து சிகிச்­சை­ய­ளித்து வந்­தனர்.

குறித்த காட்டு யானை அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­லகப் பிரி­விற்­குட்­பட்ட அஷ்ரஃப் நகர் பிர­தே­சத்தில் அமையப் பெற்­றுள்ள திண்மக் கழிவு முகா­மைத்­துவ நிலை­யத்தில் சேக­ரிக்­கப்­படும் குப்பை மேட்டில் கொட்­டப்­ப­டு­கின்ற கழிவுப் பொருட்­களை உட்­கொண்­ட­தனால் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் சுக­வீ­ன­முற்று பாரி­ய­ளவில் இதற்கு சிகிச்சை வழங்­கப்­பட்டுவந்­தன.

இருந்­த­போ­திலும் இச்­ சி­கிச்சை பல­ன­ளிக்­காத கார­ணத்­தினால் நேற்று உயி­ரி­ழந்­துள்­ளது. உயி­ரி­ழந்த காட்டு யானை­யை மிருக வைத்திய சத்­திர சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.புஷ்­ப­கு­மார தலை­மை­யி­லான குழு­வினர் நேற்று(28) மாலை வேளை பிரேத பரி­சோ­தனை மேற்கொண்டதன் பின்னர் யானையிலிருந்து பெறப்பட்ட உடலுறுப் பின் பாகங்கள் வைத்திய பரிசோதனை அறிக்கை பெறப்படுவதற்கா கொண்டு செல்லப்பட்டது.