நாட்டை நிர்­வகிக்க தெரி­யா­த­வர்­க­ளிடம் உள்­ளூ­ராட்­சியை ஒப்­ப­டைப்­பது அபா­ய­மாகும்

Published By: Priyatharshan

29 Dec, 2017 | 09:54 AM
image

நாட்டின் நிர்­வா­கத்­தினை முறை­யாக பரி­பா­லனம் செய்ய முடி­யாத தேசிய அர­சாங்­கத்­திடம் உள்­ளூ­ராட்சி சபை­களின்  அதி­கா­ரங்களை ஒப்­ப­டைப்­பது அபா­ய­க­ர­மா­ன­தொரு செயற்­பாடு என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் கட்சி அலு­வ­ல­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறுத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தற்­போது உள்­ளூ­ராட்சி சபை தேர்­த­லுக்­கான பிர­சா­ரங்கள் நாட­ளா­விய ரீதியில் இடம் பெற்று வரு­கின்­றது. நாட்டின் பிர­தான இரு கட்­சி­களும் உள்­ளூராட்சி தேர்­தலில் வெற்றி பெறு­வ­தாக மக்கள் மத்­தியில் கருத்­துக்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி வரு­கின்­றன . நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு மக்கள் மத்­தியில் வெறுப்­புக்­களே அதி­க­ரித்து காணப்­ப­டு­கின்­றன.

கடந்த இரண்டு ஆண்டு கால­மாக நாட் டில் பல வித­மான பிரச்­சி­னை­க­ளுக்கு பொது மக்கள் முகம் கொடுத்து வரு­கின்­றனர். பெற்றோல் தட்­டுப்­பாடு, ரயில் போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­க­ளது வேலை நிறுத்தப் போராட்டம் போன்­ற­வற்றில் பொது­மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டனர்.

மஹிந்த ராஜ­பக் ஷவின் ஆட்சிக் காலத்தில் 350ரூபா­வாக காணப்­பட்ட உரம் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நிர்­வா­கத்தில்2500 ரூபா­வாக விலை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மக்­களின் வாழ்க்கை செல­வுகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்­ணமே காணப்­ப­டு­கின்­றன.

விவ­சா­யத்­திற்கு தேவை­யான உரத்­தினை இறக்­கு­மதி செய்­வதில் சூழ்ச்­சிகள் இடம் பெற்று வரு­கின்­றன .இலங்­கையில் வழ­மை­யாக இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்ற உரத்­திற்கு பதி­லாக  புதிய வகை உரம் இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­வுள்­ளது. இலங்­கையின் விவ­சா­யத்­திற்கு பாவிக்­கப்­படும் உரத்தின் தன்­மை­யுடன் ஒப்­பி­டு­கையில் இதன் தரம் மேல­தி­க­மா­னது என விவ­சாய திணைக்­களம் அறி­வித்தும் 76000மெற்றிக் தொன் உரம் இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­வுள்­ளமை தேவை­யற்ற விட­ய­மு­மாகும்.

இதற்கு நிதி அமைச்சு அனு­மதி வழங்க மறுத்­த­போதும் அமைச்­சரவையை  அவ­ச­ர­மாக  கூட்டி இறக்­கு­ம­திக்­கான அனு­ம­தியை பெற்­றுக்­கொண்­டமை நிதி­ய­மைச்சின் பல­வீனத் தன்­மை­யினை வெளிப்­ப­டுத்­து­கின்­றது.குறிப்­பிட்ட உரம் இறக்­கு­மதி செய்­யப்­படும் பொழுது அதன் விலையில் மாற்றம் ஏற்­படும் அதி­க­மான விலை­யினை நிர்­ண­யிக்கும் பொழுது  சாதா­ரண விவ­சாயி ­க­ளுக்கு  கொள்­வ­னவு செய்­ய­மு­டி­யாத நிலைமை உரு­வாகும் இதன் கார­ண­மாக விவ­சா­யிகள் பெரிதும் பாதிக்­கப்­ப­டுவர் இதுவா நல்­லாட்சி.?

ஜன­வரி மாதத்தின் இறு­தியில் குறிப்­பிட்ட உரவகைகள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­மாயின் நாட்டில் விவ­சா­யத்­துறை பெரிதும் பாதிக்­கப்­ப­டு­வதால் அதன் தாக்கம் நேர­டி­யாக விவ­சாய குடும்­பங்­க­ளையே  சேரும்.

 இவ்­வா­றான பிரச்­சி­னை­களின் மத்­தி­யிலே நல்­லாட்சி அர­சாங்கம் நிர்­வா­கத்­தினை மேற் ­கொண்டு வரு­கின்­றது. பிரச்சினைகளின் தீர் விற்கு வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் வெறுமனே வாக்குறுதிகளாகவே காணப் படுகின்றன. இதனடிப்படையில் உள்ளூ ராட்சி அதிகாரங்களும் தேசிய அரசாங்கத் தின் பொறுப்பின் கீழ் சென்றால் நாட்டின் எதிர்காலமும் தனிமனித வாழ்வும் மிக அபா யகரமானதாக மாறுவது நிச்சயம். இதற்கான மாற்று நடவடிக்கை மக்களிடமே உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58