கூட்­டு­ எ­திர்க்­கட்­சி­யுடன் இணைந்து செயற்­பட்டு வந்த முக்­கிய  உறுப்­பி­னரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் உப தலை ­வ­ரு­மான சோம­வீர சந்­தி­ர­சிறி, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ரவு வழங்க தீர்­மா­னித்­துள் ளார்.

ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­திற்கு நேற்று முற்­பகல் சென்ற சந்­தி­ர­சிறி, ஜனா­தி­ப­தியை சந்­தித்து அவ­ரது வேலைத்­திட்­டங்­க­ளுக்கு தனது  ஆத­ரவை வழங்­கு­வ­தா­கவும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் வெற்­றிக்கு பாடு­ ப­டு­வ­தா­கவும் கூறி­யுள்ளார். ஏற்­க­னவே தினேஷ்­ கு­ண­வர்­த­னவின் தலை­மை­யி­லான மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஸ்ரீயானி விஜே­வர்த்­தன, ஜனா­தி­ப­தியை சந்­தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்டதுடன் பிரதியமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக் கது.