மூன்றாம் காலாண்டில் உத்­தே­சித்­ததை விட பின்­ன­டை­வான பொரு­ளா­தார வளர்ச்சி

Published By: Priyatharshan

29 Dec, 2017 | 09:14 AM
image

உத்­தே­சிக்­கப்­பட்ட அபி­வி­ருத்­தியை விட பின்­ன­டை­வான பொரு­ளா­தார வளர்ச்­சியே 2017  ஆம் ஆண்டின் மூன்­றா­வது காலாண்டில் பதி­வா­கி­யுள்­ளது. எனினும் அடுத்த ஆண்டில் நிலை­யான பொரு­ளா­தார அபி­வி­ருத்தி இலக்­கு­களை அடை முடியும் என  மத்­திய வங்கி ஆளுநர் கலா­நிதி இந்­தி­ரஜித் குமா­ர­சு­வாமி தெரி­வித்தார். 

நெருக்­க­டி­யி­லி­ருந்து மீள ஆய்­வு­க­ளையும் தேவை­யான ஆலோ­ச­னை­க­ளையும் வழங்க முடியும் என்றும்  ஆனால் அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­தி­டமே உள்­ளது எனவும்   அவர் குறிப்­பிட்டார்.  

இலங்கை மத்­திய வங்­கியின் 8 ஆவது பண­வியல் கொள்கை ஆய்வு ஆளுநர் கலா­நிதி இந்­தி­ரஜித் குமா­ர­சு­வாமி தலை­மையில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றது. இதன் போதே மேற்­கண்­ட­வாறு  அவர்  கூறினார். 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில் 

நேற்று முன்­தினம் 27ஆம் திகதி நடை­பெற்ற நிதிச்­சபை கூட்­டத்தில் தற்­போ­தைய நாணயக் கொள்கை நிலை பொருத்­த­மா­னது என்ற கருத்­தினைக் கொண்­டி­ருந்­த­துடன் இலங்கை மத்­திய வங்­கியின் வட்டி கொள்கை வீதங்­களை தற்­போ­தைய மட்­டங்­க­ளி­லேயே பேணு­வ­தென தீர்­மா­னித்­துள்­ளது. எனினும் பொரு­ளா­தா­ரத்தின் அபி­வி­ருத்­தி­களைத் தொடர்ந்தும் தீவி­ர­மாகக் கண்­கா­ணிப்­ப­துடன் தேவை ஏற்­படும் பட்­சத்தில் பொருத்­த­மான கொள்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவும் தீர்­மா­னித்­துள்­ளது. 

இத்­த­கைய தீர்­மா­னங்­களை மேற்­கொள்­வ­தற்கு நாண­யச்­ச­பையால் கீழ்­வரும் முக்­கிய துறை அபி­வி­ருத்­திகள் கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டுள்­ளன. தொகை­ம­திப்பு புள்­ள­ிவி­பரத் திணைக்­க­ளத்தின் தற்­கா­லிக மதிப்­பீ­டு­க­ளுக்­கி­ணங்க இலங்­கையின் பொரு­ளா­தா­ர­மா­னது 2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் எதிர்­பார்த்த வளர்ச்­சிக்கு குறை­வான வளர்ச்­சி­யொன்றைப் பதிவு செய்­துள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் பொரு­ளா­தாரம் 2017 இல் இரண்டாம் காலாண்டில் பதி­வு­செய்­யப்­பட்ட 4.0 சத­வீ­தத்­துடன் ஒப்­பி­டும்­போது 2017 இல் மூன்றாம் காலாண்டில் ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டையில் 3.3 சத­வீ­தத்தால் வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

மூன்றாம் காலாண்­டுக்­கான பொரு­ளா­தார வளர்ச்­சி­யா­னது பிர­தா­ன­மாக கைத்­தொழில் மற்றும் சேவைகள் துறையின் மித­மான விரி­வாக்­கத்­தினால் உந்­தப்­பட்­டுள்ள நிலையில் கால­நிலை தொடர்­பான குழப்­ப­நி­லை­க­ளுக்கு வகை­கூறும் வகையில் வேளாண்மை துறை­யா­னது எதிர்­ம­றை­யான வளர்ச்­சி­யொன்றை தொடர்ந்தும் பதி­வு­செய்­துள்­ளது.

குறு­கிய வளர்ச்சி வாய்ப்­புக்கள் தொடர்ந்தும் மித­மாகக் காணப்­ப­டினும் வெளி­நாட்டு நேரடி முத­லீட்­டினால் ஏற்­று­மதி மற்றும் முத­லீட்டின் தொடர்ச்­சி­யான முன்­னேற்­றத்­தினால்  2018 ஆம் ஆண்டில் தேசிய பொரு­ளா­தா­ர­மா­னது ஒரு ஸ்திர­மான முன்­னேற்ற நிலையை அடையும். 

அதே­போன்று முதன்மை பண­வீக்­க­மா­னது 2017 நவம்­பரில் எதிர்­பார்க்­கப்­பட்­ட­வாறு வீழ்ச்­சி­கண்­ட­போ­திலும் உயர்ந்த உள்­நாட்டு உணவு விலை­களின் தாக்­கத்­தினைப் பிர­தி­ப­லிக்கும் வகையில் தேசிய நுகர்வோர் விலைச்­சுட்டெண் மற்றும் கொழும்பு நுகர்வோர் விலைச்­சுட்டெண் ஆகிய இரண்டின் அடிப்­ப­டையில் பண­வீக்­கமும் உயர்ந்த மட்­டத்­தி­லேயே தொடர்ந்தும் காணப்­ப­டு­கின்­றது. 

 மத்­திய வங்­கி­யினால் பேணப்­பட்டு வரு­கின்ற இறுக்­க­மான நாண­யக்­கொள்கை நிலையின் விளை­வினைப் பிர­தி­ப­லிக்கும் வகையில் கேள்வி அழுத்­தங்­களின் மித­மான தன்­மை­யினைக் சுட்­டிக்­காட்டி மையப் பண­வீக்­க­மா­னது தொடர்ந்தும் கட்­டுப்­பாட்­டி­லேயே காணப்­ப­டு­கின்­றது. 

நிரம்­பல்­பக்க குழப்­பங்­க­ளி­லி­ருந்து தோன்­று­கின்ற உயர்ந்த உண­வு­வி­லை­க­ளா­னது முதன்மைப் பண­வீக்கம் உட­னடி எதிர்­கா­லத்தில் தொடர்ந்தும் ஓர­ள­விற்கு உயர்ந்த மட்­டத்தில் விளங்­கு­வதில் சிறி­த­ள­வா­வது பாதிப்­பினை ஏற்­ப­டுத்­து­கின்ற போதிலும் 2018 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டின் இறு­தியில் விரும்­பத்­தக்க மட்­டத்­தினை நோக்கித் திரும்பும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இறுக்­க­மான நாணயக் கொள்கை நிலையால் வர்த்­தக வங்­கி­களால் தனியார் துறைக்கு வழங்­கப்­பட்ட கொடு­க­டனின் வளர்ச்சி மெது­வ­டைந்து 2017 நவம்­பரில் விரிந்த பண­நி­ரம்பல் வளர்ச்சி கணி­ச­மா­ன­ளவு குறை­வ­டைந்­த­மைக்கு பிர­தான கார­ண­மாகும். அதே­வேளை வட்டி கொள்கை வீதங்கள் மற்றும் அரச பிணை­யங்கள் மீதான விளை­வு­க­ளுக்கு இடையில் காணப்­பட்ட சில வேறு­பா­டுகள் திருத்­தப்­பட்­ட­மையால் அரச பிணை­யங்கள் மீதான விளை­வுகள் உயர்ந்த மட்­டத்­தி­லி­ருந்து கீழ்­நோக்­கி­சீராக்­கப்­பட்­டுள்­ளன. 

வெளி­நாட்டுக் கணக்­கு­களின் அழுத்­தங்­களை ஓர­ள­விற்குத் தணிக்கும் வகையில் அரச பிணை­யங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரி­வர்த்­தனை போன்­ற­வற்றின் மீதான உட்­பாய்ச்­சல்­களின் பேரில் நிதி­யியல் கணக்­கிற்கு உறு­தி­யான உட்­பாய்ச்­சல்கள் அவ­தா­னிக்­கப்­பட்­டன. 

சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் விரி­வாக்­கப்­பட்ட நிதி­யியல் வச­திகள் நிகழ்ச்சித் திட்­டத்தின் நான்­கா­வது தொகுதி இந்த மாதம்   கிடைக்­கப்­பெற்­ற­மையும் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின் முத­லீட்டு மீள்­பெ­றுகை தொடர்ச்­சி­யான உட்­பாய்ச்­சல்கள் போன்­றவை சென்­மதி நிலு­வை­யினை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தற்கு துணை புரிந்தன.

இத்தகைய அபிவிருத்திகளுடன் மத்திய வங்கியின் தொடர்பான தேறிய அடிப்படையிலான சுமார் 1.7 பில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகளையும் பிரதிபலித்து இம்மாத  இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் சுமார் 7.8 டொலர் பில்லியன் வரை காணப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இத்தகைய பின்னணியில் நாணயச்சபை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 7.25 சதவீதமாகவும் 8.75 சதவீதமாகவும் பேணுவதெனத் தீர்மானித்துள்ளது  என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32