நீதி­யான தேர்­த­லுக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் அனைத்து தெரி­வத்­தாட்சி அலு­வ­லர்­களும் செயற்­பட்டு ஒத்­து­ழைப்­புக்­களை நல்க வேண்­டு­மென தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மகிந்த தேசப்­பி­ரிய கோரி­யுள்ளார்.

இரா­ஜ­கி­ரி­யவில் உள்ள தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் செய­ல­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை நாடா­ள­விய ரீதியில் உள்ள தெரி­வத்­தாட்சி அலு­வ­லர்­க­ளுக்கும், தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கும் இடை­யி­லான சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது.

இச்­சந்­திப்பில் நாடா­ள­விய ரீதியில் உள்ள அனைத்து மாவட்­டங்­களின் தெரி­வத்­தாட்சி அலு­வ­லர்­களும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். குறித்த சந்­திப்­பின்­போது,  தெரி­வத்­தாட்சி அலு­வ­லர்கள் அனை­வரும் தமது மாவட்­டங்­களில் உள்­ளு­ராட்சி மான்­றங்­க­ளுக்­கான தேர்தல் தொடர்பில் எடுக்­கப்­பட்­டுள்ள ஆயத்த செயற்­பா­டு­களை விளக்கிக் கூறி­னார்கள். 

அதன் பின்னர் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழவின் தலைவர், இம்­முறை தேர்­த­லின்­போது தேர்தல் பணி­களில் ஈடு­படும் ஆள­ணி­யி­னரின் எண்­ணிக்கை அதி­க­மாக அவ­சி­ய­மா­கின்­றது. ஆகவே அதற்­கு­ரிய தயார்ப்­ப­டு­த­தல்­களை மேற்­கொள்ள வேண்டும். அத்­துடன் வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் பெரும்­பா­லா­னவை வாக்கு எண்ணும் நிலை­யங்­க­ளாக மாற்­றப்­ப­ட­வுள்­ளன. ஆகவே உரிய பாது­காப்­புக்­களை மேற்­கொள்ள வேண்டும். ஆதற்­காக அந்­தந்த மாவட்­டங்­களில் உள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்­தி­யட்­கர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு உரிய தயார்ப்­ப­டுத்­தல்­களை முன்­னெ­டுக்க வேண்டும் உள்­ளிட்ட விட­யங்­களை குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து ஒவ்­வொரு மாட்ட தெரி­வத்­தாட்சி அலு­வ­லர்­களும், தமது மாவட்­டங்­களில் காணப்­ப­டு­கின்ற பற்­றாக்­கு­றைகள் தொடர்­பாக குறிப்­பிட்­டுக்­கூ­றி­னார்கள். குறிப்­பாக, வாக­னங்கள், ஆள­ணி­யினர், போன்­றவை தொடர்பில் பற்­றாக்­கு­றைகள் காணப்­ப­டு­வ­தாக பல மாவட்­டங்­களின் தெரி­வத்­தாட்சி அலு­லர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர்.

அச்­ச­ம­யத்தில் ஆணைக்­கு­ழவின் தலைவர், அது­தொ­டர்­பி­லான மாற்­று­யொ­ச­னைகள் தொடர்பில் ஆராய்­வ­தாக குறிப்­பிட்­ட­தோடு, குறிப்­பாக வாக்கு எண்ணும் பணிகள் வாக்கு எண்ணும் நிலை­யங்­களில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­மையால் அது குறித்து கூடியளவு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தேர்தலை செவ்வனே நடத்துவதற்கான அனைத்து ஆயத்தப்பணிகளையும் விரைந்து முன்னெடுக்குமாறு பணித்ததோடு சுயாதீனமானதும், நீதியானதுமான தேர்தலுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.