சவுதி அரேபியாவில் 3 நாளில் 7,706 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டோரில் 3,312 பேர் சவுதி குடிமக்கள் என்றும் மீதமுள்ள 4,494 பேர் வெளிநாட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது 434 வாகனங்கள் பிடிப்பட்டதாகவும் அதில் 37 வாகனங்கள் திருடு போன வாகனங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் 60 வாகனங்கள் குற்ற செயல்கள் செய்ய பயன்படுத்தப்பட்டதாகவும், 164 வாகனங்களுக்கு சரியான ஆவணங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி துப்பாக்கி, கத்தி என 749 ஆயுதங்கள், 348 போதை மாத்திரைகள், 1,160 கிராம் கஞ்சா  போன்றன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.