இந்திய அணிக்கெதிராக இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க அணியின் விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரான குயின்டன் டி கொக், சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின்போது, வலது காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டார். 

இதனால் போட்டியின் 2ஆவது நாள் ஆட்டத்தில் அவர் களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக டி வில்லியர்ஸ், விக்கெட் காப்பாளராக கடமையாற்றினார்.

இந்நிலையில் எதிர்வரும் 5 ஆம் திகதி இந்திய அணிக்கெதிராக ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில், குயின்டன் டி கொக் விளையாடுவதில் சந்தேகமேற்பட்டுள்ளது.