சட்டவிரோதமாக நாட்டினுள் ஒரு தொகை ஹெரோயினை கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் இன்று அதிகாலையில் கைது செய்துள்ளனர்.

யூ.எல். 126 என்ற விமானத்தில் இலங்கை வந்த குறித்த நபர் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 212 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி சுமார் 2,100,000 ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  சென்னையை சேர்ந்த 33 வயதுடைய மனி என சுங்கப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.