129 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த சுவிஸ்லாந்துக்குச் சொந்தமான உல்லாசக் கப்பலொன்று விபத்துக்குள்ளானதில் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

100 மீற்றர் நீளமான இந்தக் கப்பல் ரைன்  நதி வழியாக நேற்றுமுன்தினம்  பயணித்துக்கொண்டிருந்தபோதே  விபத்துக்குள்ளானது. இதன்போது ஜேர்மனியின் மேற்கு நகரமான டுயிஸ்பேர்  அருகிலுள்ள பாலத்துடன்  இந்தக் கப்பல் மோதியதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கப்பலிருந்தவர்களை காப்பாற்றுவதற்காக ஜேர்மனியின் மற்றுமொரு கப்பல் உதவியதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.