வடக்கு முத­ல­மைச்சர் இன்று  அமர்ந்­தி­ருக்கும்  முத­ல­மைச்சர்  கதி­ரைக்­கு­ரிய   மாகாண சபையை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக  நாங்கள்   பாரிய போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தோம்.     தமிழ் மக்­க­ளுக்­காக  விக்­கி­னேஸ்­வ­ரனை விட   நான்   அதிகம் குரல் கொடுத்­துள்ளேன் என்­ப­தனை  சம்­பந்­தனை கேட்டால் கூறுவார் என்று ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.  

மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத் தில் அர­சாங்­கத்தில் இருந்­து­கொண்டு நான் யுத்த விரோத போராட்­டத்தில் கலந்­து ­கொண்டேன். ஆனால் அவ்­வா­றான போராட்­டங்­களில் நான் விக்­கி­னேஸ்­வ­ரனை காண­வில்லை  என்றும் அவர் குறிப்­பிட்டார். 

தர­வுகள் இல்­லாமல் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான  டிலான் பெரேரா தன்னை விமர்­சிப்­ப­தாக   வடக்கு முதல்வர்  விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்­ளமை குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.  

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில், 

வடக்கு மாகாண சபையின் செலவு விப­ரங்­களை வடக்கு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் எனக்கு அனுப்­பி­ய­தாக கூறி­யி­ருக்­கின்றார். ஆனால் அவ்­வாறு  எதுவும் எனக்கு கிடைக்­க­வில்லை. அவர்  அனுப்­பி­யி­ருக்க  மாட்டார் என்று  கரு­து­கின்றேன். காரணம்   அவ்­வாறு அனுப்­பினால்    நான்   கூறி­யது உண்­மை­யா­கி­விடும் என்று  அவ­ருக்கு தெரியும்.  

இதே­வேளை மத்­திய அர­சாங்­கத்­தினால் அனுப்­பப்­படும் நிதியை வடக்கு மாகா­ண­சபை உரிய முறையில் செல­வளிக்­க­வி

ல்லை என்று இப்­போதும் நான் கூறு­கின்றேன். மேலும் நான்  தமிழ் மக்­க­ளுக்­காக எவ்­வாறு குரல் கொடுக்­கின்றேன் என்று நாட்டு மக்­க­ளுக்கு தெரியும்.    குறிப்­ பாக நான் உலக நாடுகள் மத்­தியில் இலங்கை  தமிழ் மக்­க­ளுக்­காக எவ்­வாறு குரல் கொடுத்தேன் என்று எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­த­னுக்கு நன்­றா­கவே  தெரியும். 

தமிழ் மக்­க­ளுக்­காக    அதி­க­ளவில் குரல் கொடுப்­பது விக்­கி­னேஸ்­வ­ரனா அல்­லது    டிலான் பெரே­ராவா என்று கேட்டால்     டிலான் பெரேரா என்றுதான் தமிழ் மக்கள் கூறு­வார்கள்.  எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­தனும்  அதனை கூறுவார். 

வடக்கு முத­ல­மைச்சர் இன்று அமர்ந்­தி­ருக்கும்  முத­ல­மைச்சர்  கதி­ரைக்­கு­ரிய   மாகாண சபையை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக நாங்கள் பாரிய போராட்­டங்­களை முன்­னெ­டுத்­த­வர்கள். தமிழ் மக்­க­ளுக்­காக விக்­கி­னேஸ்­வ­ரனை விட நான் அதிகம் குரல் கொடுத்­துள்ளேன். மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தில் இருந்து கொண்டு நான் யுத்த விரோத  போராட்டத் தில் கலந்துகொண்டேன். ஆனால்  அவ்வாறான போராட்டங்களில் நான் விக்கி னேஸ்வரனை காணவில்லை என்றார்.