இடம்பெற்று முடிந்த 2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்காக விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி பரீட்சைகள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்காக எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம்  15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியட்டுள்ளது.

இந்நிலையில், 163104 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கான அனுமதி பெறக்கூடிய வாய்ப்புள்ளதாகவும்  பரீட்சைக்கு தோற்றிய 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

இதேவேளை , பெறுபேறுகள் தொடர்பில் எழும் சந்தேகங்கள்  குறித்து விசாரணை செய்வதற்காக சிறப்பு தொலைபேசி இலக்கங்கள் சில பரீட்சைகள் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளன. குறித்த தொலைபேசி இலக்கங்கள் வருமாறு,  0112784201, 0112784537, 0113188350, 0113140314, 1911