தமிழ்க்கூட்டமைப்பு தற்போது மக்களிடம் மாட்டிக்கொண்டுள்ளது

Published By: Priyatharshan

28 Dec, 2017 | 09:00 AM
image

தேசிய கட்சிகளோடு கூட்டு சேர்ந்தாலும் தேர்தல் களில் தமது வழி தனி வழி என தெரிவித்துள்ள ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தர பல தலைவர்கள் செயற்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் ஒருவரும் இதய சுத்தியோடு செயற்பட்டிருக்கவில்லை. அதனால் தான் இன்னமும் தமிழ் மக்கள் ஒன்றையும் பெற முடியவில்லை. சேர். பொன். இராமநாதன் முதல் தந்தை செல்வநாயகம் மற்றும் ஜீ.ஜி பொன்னம்பலம் வரை அவ்வாறான தலைவர்களே எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்ற ஈ.பி.டி.பியானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்கும் , பத்திரிகையாளர் சந்திப்பும் நேற்று நண்பகல் 12 மணியளவில் ஈ.பி.டி.பியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

நாம் ஆரம்ப காலம் தொடக்கமே எமது கொள்கையாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, என்றும் பிரிக்கப்பட முடியாத வடகிழக்கிற்குள் தீர்வு என்பதையே கூறிவருகின்றோம். நாம் எமது கொள்கையில் இருந்து பின் வாங்கவில்லை.

தேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்து செயற்பட்டாலும், உள்ளூர் தேர்தல்களில் நாம் இணைந்து செயற்படுகின்ற தேசிய கட்சியின் கொள்கைகள் தாக்கம் செலுத்துவதில்லை. எமது கட்சிக்கென தனியான தேர்தல் விஞ்ஞாபனத்தை வரைந்து மக்கள் முன்பு அதனை கொண்டு சென்று அந்த விஞ்ஞாபனத்திற்கே வாக்களிக்குமாறு கோருகின்றோம். அவ்வாறு நாம் வெற்றி பெறுகின்ற போதும் அம்மக்கள் எதனை எதிர்பார்த்து வாக்களித்தார்களோ அதனை செய்து கொடுத்துள்ளோம்.

இவ்வாறு தான் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலிலுக்காகவும் எமது கட்சி ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது. அதில் மக்களுடைய அடிப்படை பிரச்சனைகள், மற்றும் அரசியல் தீர்வு, நீண்டகால அரசியல் பிரச்சனைகள் என்பவற்றை எவ்வாறு எமது கட்சி அணுகிக் கொண்டுள்ளது அல்லது அவை தொடர்பில் எமது நிலைப்பாடு என்ன என்பவற்றை தெளிவாக கூறியுள்ளோம்.

நாம் இம்முறை வடகிழக்கில் உள்ள 40 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுகின்றோம். இந்த தேர்தலுக்காக எமது கட்சியிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களில் 36 வீதமான இடம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் 50 வீதமாக உயர்த்தப்படும். எமது கட்சியின் கொள்கைகளை சிலர் கடந்த காலங்களில் விமர்சித்து வந்திருந்தனர்.

ஆனால் பல நாட் கள்வர் ஒருநாள் பிடிபடுவான் என்பது போல தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது மக்களிடம் மாட்டிக் கொண்டுள்ளது. கூட்டமைப்பினர் மக்களுடைய நலன்கள் பற்றி சிந்திக்காமல் தங்களுடைய பதவிகளை எவ்வாறு தக்க வைப்பது என்பது பற்றியே செயற்பாட்டுக் கொண்டுள்ளனர். நாம் உள்ளூராட்சி தேர்தலில் சபைகளை கைப்பற்றினால், நாம் ஆட்சி அமைக்கும் சபைகளில் கடந்த காலங்களில் நிகழ்ந்த ஊழல்கள், அதிகார துஸ்பிரயோகங்களை விசாரணைக்குட்படுத்துவோம்.

இது தவிர எம்மால் நியமிக்கப்பட்டுள்ள வட்டார குழுக்கள் மூலம் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசோடு இணைந்து செயற்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வை காணவில்லை. குறிப்பாக அண்மையில் மக்கள் நடமாட்டம் கொண்ட இடத்தில் பௌத்த பிக்கு ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அது தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்போ, வடக்கு மாகாண சபையின் தலைமையோ நடவடிக்கை சரியான முறையில் ஒன்றும் எடுக்கவில்லை. மதகுரு ஒருவரின் உடல் தகனம் செய்வதற்கு எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் குறித்த தகனம் எமது மக்களுடைய மனங்களை புண்படுத்தாத வகையில் அமைந்திருக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு நிரந்த தீர்வை பெற்று தர பல தலைவர்கள் செயற்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் ஒருவரும் இதய சுத்தியோடு செயற்பட்டிருக்கவில்லை. அதனால் தான் இன்னமும் தமிழ் மக்கள் ஒன்றையும் பெற முடியவில்லை. சேர் பொன் இராமநாதன் முதல் தந்தை செல்வநாயகம் மற்றும் ஜீ.ஜி பொன்னம்பலம் வரை அனைவரது முயற்சிகளும் தோல்வியில் தான் முடிவடைந்துள்ளன.

எனக்கு ஆயுத போட்டத்திலும், ஜனநாயக நீரோட்டத்திலும் நீண்டகால அனுபவம் உண்டு. அதன் அடிப்படையில் தான் நான் இவற்றை கூறுகின்றேன். இந்த தலைவர்களது கோசங்கள் தேர்தல் கோசங்காளாக இருந்தவையே மாத்திரமன்றி, மக்களுக்கானதாக இருந்திருக்கவில்லை. தங்களுடைய கொள்கையில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை.

இன்றைய அரசியல் தலைமைகள் தமது கொள்கைகளுக்கு விசுவாசமாக இல்லை அதனால் தான் ஆட்சி மாறிய பின்னரும் கூட மக்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியவில்லை. எனினும் எமக்குள் அரசியல் ரீதியாக பல பிளவுகள் இருந்தாலும் மக்களுடைய பொதுப் பிரச்சனையில் நாங்கள் ஒன்றுபட வேண்டும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

இறுதியாக ஒரு சிலருடைய கொலைகள் நாங்கள் செய்தோம் என சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். ஆனால் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள விசாரணைகள் அந்த கொலைகளை யார் புரிந்தனர் என்று வெளிக்காட்டி கொண்டுள்ளன. இதே போல் ஊடகவியலாளர் நிமலராஜன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சிவில் செயற்பாட்டளர்களுடைய கொலைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட்ட வேண்டும்.

குறிப்பாக இவ்விசாரனைகள் கடந்த 1983ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற காணமல் போனமை கொலைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியவரும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43