யுனிகோர்ன் டயர் ரிடிரெட் (பிரைவட்) லிமிட்டெட், விவ­சாய துறையில் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய டயர்­களை மீள் நிரப்பும் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்­ளது. நிறு­வ­னத்தின் நவீன வச­திகள் படைத்த ரீபில்டிங் பகு­தி­க­ளான பன­லுவ, வட­ரேக தொழிற்­பேட்டை வல­யத்தில் இந்த செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

புதி­தாக ரீபில்ட் செய்­யப்­படும் டயர்கள் மேல­திக பிடி­மானம் மற்றும் மேம்­ப­டுத்­தப்­பட்ட ஆயுள் காலத்­தையும் கொண்­டுள்­ளன. விசேட இறப்பர் சேர்­மா­னத்தை பயன்­ப­டுத்தி இந்த ரீபில்டிங் செயன்­முறை முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­துடன், விவ­சா­யத்­து­றையில் மேல­திக பாது­காப்பு மற்றும் அதி­க­ளவு தூரம் பய­ணிக்­கக்­கூ­டிய திறனை வழங்கும் வகையில் அமைந்­துள்­ளன. யுனிகோர்ன் டயர்கள் சந்­தையில் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஒப்­பற்ற சேவை­யுடன் சகாய விலையில் சிறந்த டயரை பெற்­றுக்­கொ­டுப்­பது எனும் தொனிப்­பொ­ருளில் அறி­முகம் செய்­துள்­ளன.

யுனிகோர்ன் டயர்கள் 13x28 Lug 20, 11/12x28 Lug 17and 20, 500x12, 600x12, 600x16 three line grip மற்றும் Jeep grip ஆகிய மாதி­ரி­களில் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றன. யுனிகோர்ன் விவ­சாய ரீபில்ட் டயர்­களை நாடு முழு­வதும் காணப்­படும் டயர் விற்­பனை நிலை­யங்­க­ளி­லி­ருந்து கொள்­வ­னவு செய்ய முடியும்.யுனிகோர்ன் ரிடிரெட் டயர் (பிரைவட்) லிமிட்­டெட்டை ஸ்தாபித்­ததன் நோக்கம், உயர் தரம் வாய்ந்த மற்றும் நீடித்து உழைக்கும் தயா­ரிப்பை புதிய சர்­வ­தேச தரங்­களில் உள்­நாட்டு வாகன பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கு­வது ஆகும்.