ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்து மத்தியதரைக் கடல் வழியாகப் பயணித்த சுமார் 250 பேரை மீட்டுள்ளதாக இத்தாலிய கரையோர காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சிறிய படகுகளில் பயணித்தவர்களையே நேற்றுமுன்தினமும், நேற்றும் மீட்டுள்ளனர்.

லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களைஇ இத்தாலிக்கு அனுப்பும் நடவடிக்கையை முதற்தடவையாக ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அண்மையில் ஆரம்பித்துள்ளது.