(லியோ நிரோஷ தர்ஷன்)

திருட்டு திருமண சான்றுதழ்களை காண்பித்து மஹிந்த ராஜபக்ஷவை உரிமையாக்கிக்கொள்வதற்கு பலர் முயற்சிக்கின்றனர். அந்த வரிசையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இழிவாக சிந்தித்து செயற்படுகின்றமை ஆச்சரியமாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். 

பிவித்துரு ஹெல உறுமயவின் ஊடக சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.