எதிர் வரும் பெப்ரவரி மாதம்  23 மற்றும் 24 திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறவுள்ளது.

அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு  இந்திய பக்தர்களின் வருகைக்கான ஏற்பாடுகளை செய்து தர தமிழகத்திலுள்ள பங்குதந்தைகளுக்கு யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.