பாடசாலை செல்ல வேண்டிய வயதில் பாடசாலைக்குச் செல்லாமல் 461,000 சிறுவர்கள் நாட்டில் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு மில்லியன் மக்கள் ஒரு வேளை உணவையே ஒரு நாளைக்கு உட்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ் அரசாங்கத்தை விட மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் சிறப்பாகச் செயற்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிவடைவதை நாங்கள் அனுமதிக்கக்கூடாது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருதல், சட்ட ஆட்சி, போதைப்பொருளற்ற சமூகம், கல்வியின் தரத்தை உயர்த்துதல் போன்றனவே மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் முக்கிய நோக்கங்களாக இருந் தன. இதையே ஜனவரி 8 இற்கு பிறகும் எதிர்பார்த்தோம். இருப்பினும் நாங்கள் பெற்றது என்ன? பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டதா? இந்த ஆட்சியையிட்டு மக்கள் இன்று கவலையடைகின்றனர். மக்கள் இன்று இலக்கின்றிக் காணப்படுகின்றனர். 580,000 மக்கள் உதவியின்றி தவிக்கின்றனர் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்ததாக அந்த ஆங்கில நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.