இலங்கை ஒலிம்பிக் சங்­கத்தின் தேர்­தலை உடனே நடத்­தக்­கோரி சர்­வ­தேச ஒலிம்பிக் சம்­மே­ள­னத்­திற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையின் 14 தேசிய விளை­யாட்டு சங்­கங்கள் சேர்ந்து கையெ­ழுத்­திட்டு இந்த கடி­தத்தை சர்­வ­தேச ஒலிம்பிக் சம்­மே­ள­னத்­திற்கு அனுப்­பி­வைத்­துள்­ளன.

கடந்த 8 வரு­டங்­க­ளாக ஒரே நிர்­வா­கத்தின் கீழ் தேசிய ஒலிம்பிக் சங்கம் நடை­பெற்­று­வ­ரு­வ­தா­கவும் அதனால் விளை­யா­டுத்­துறை பாரிய வீழ்ச்சி கண்­டுள்­ள­தா­கவும் அந்தக் கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தற்­போ­தைய தேசிய ஒலிம்பிக் சங்­கத்தின் தலை­வ­ராக ஹேமசிறி பெர்னாண்டோ செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.