வவுனியா பேருந்து நிலைய இழுபறி.!

Published By: Robert

27 Dec, 2017 | 11:26 AM
image

வவு­னி­யாவில் நேற்று பேருந்து நிலை­யத்தில் போக்­கு­வ­ரத்து செயற்­ப­டு­வதில் ஏற்­பட்ட முரண்­பா­டுகள் காரண­மாக இன்­றை­ய­தினம் தனியார் பேருந்து உரி­மை­யாளர் சங்­கத்­தினர், இலங்கை போக்­கு­வ­ரத்து சபை­யினர் மற்றும் இலங்கை போக்­கு­வ­ரத்து சபையின் இணைந்த தொழிற்­சங்க பிர­தி­நி­திகள் ஆகிய மூன்று தரப்­பி­ன­ரையும் நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கு­மாறு அழைப்­பாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இச் சம்­பவம் தொடர்­பாக தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

 வவு­னி­யாவில் 195 மில்­லியன் ரூபா செலவில் அமைக்­கப்­பட்­டுள்ள புதிய பஸ் நிலை­யம் கடந்த 11 மாத­ங்களாக சேவைகள் இடம்­பெ­றா­மையால் பூட்­டப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் நேற்­று­ முன்­தினம் முதல் இ.போ.சபை மற்றும் தனியார் பஸ் சேவைகள் இரண்டும் புதிய பேருந்து நிலை­யத்தில் இருந்து சேவையில் ஈடு­ப­டு­மாறு முத­ல­மைச்­ச­ரினால் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்பில் இரு பகு­தி­யி­ன­ருக்கும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலை யில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வவு­னியா நக­ர­ச­பைக்­கும் வவு­னியா பொலி­ஸா­ருக்கும் முத­ல­மைச்­ச­ரினால் அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

எனினும் இதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் இ.போ.சபை தரப்பால் சில பிரச்­சி­னைகள் முன்­வைக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து நேற்­று முன்தினம் முத­ல­மைச்­சரின்  சிரேஷ்ட செய­லாளர் விஜ­ய­லட்­சுமி கேதீஷ்­வரன் மற்றும் வட மாகாண முத­ல­மைச்­சு செய­லாளர் திரு­மதி ரூபிணி வர­த­லிங்கம் ஆகியோர் வவு­னி­யா­விற்கு வருகை தந்து சம்­பந்­தப்­பட்ட தரப்­புக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர்.

இத­ன­டிப்­ப­டையில் நத்தார் மற்றும் பண்­டி­கைக்­காலம் என்­பதால் புதிய பஸ் நிலை­யத்தில் இருந்து முழு­மை­யான சேவையை மேற்­கொள்­வ­தனை இரண்டு வாரங்­க­ளுக்கு பிற்­போ­டு­வது என தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் இடைப்­பட்ட காலப்­ப­கு­

தியில் தனியார் பஸ்ஸின் உள்ளூர் சேவை கள் மட்டும் இ.போ.சபையின் பழைய பஸ் நிலை­யத்தில் இருந்­தும் தூர இடங்­க­ளுக்­கான சேவைகள் புதிய பஸ் நிலை­யத்தில் இருந்தும் செயற்­ப­டுத்­து­வ­தற்கு முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன் உத்­த­ர­விட்­டுள்­ள­தாக முத­ல­மைச்­சரின் சிரேஷ்ட செய­லாளர் விஜ­ய­லட்­சுமி கேதீஸ்­வரன் தெரி­வித்­தி­ருந்தார்.

இதை­ய­டுத்து நேற்றுக் காலை வவு­னியா இ.போ.ச. பஸ் நிலை­யத்­திற்கு தனியார் பஸ்கள் உள்ளூர் சேவை­களை முன்­னெ­டுக்க சென்ற போது இ.போ.சபை­யினர் அப் பேருந்­து­களை உள் நுழைய விடாது தடுத்து பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர். இத­னை­ய­டுத்து குறித்த பகு­தியில் பொலிஸார் குவிக்­கப்­பட்­ட­துடன் பொலிஸார் மற்றும் மக்கள் பிர­தி­நி­திகள் வருகை தந்து இரண்டு தரப்­பி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யா­டினர். இத­னை­ய­டுத்து புதிய பேருந்து நிலை­யத்தில் இருந்து தனியார் பேருந்­துகள் இயங்­கு­வ­தற்கும் பழைய பேருந்து நிலை­யத்தில் இருந்து இ.போ.சபை இயங்­கு­வ­தற்கும் தற்­கா­லி­க­மாக இணக்கம் காணப்­பட்­டது. உரிய சட்ட நட­வ­டிக்கை மூலம் இரண்டு தரப்பினர்­க­ளையும் புதிய பேருந்து நிலை­யத்தில் இருந்து சேவை­களை வழங்கச் செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக வவு­னியா நக­ர­சபைச் செய­லாளர் இ.தயா­பரன் தெரி­வித்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்து முறுகல் நிலை பிற்­பகல் முடி­வுக்கு வந்­தது. 

வட மாகாண முத­ல­மைச்­சரின் உத்­தரவின் பிர­காரம் பழைய பேருந்து நிலை­யத்தில் இருந்து இன்­று­முதல் தனியார் பேருந்து சேவை­யினர் உள்ளூர் சேவை­யினை ஆரம்­பிப்­ப­தற்­காக தமது பேருந்­து­களை இலங்கை போக்­கு­வ­ரத்­து­சபை சேவையில் ஈடு­படும் பழைய பேருந்து நிலை­யத்­தினுள் தமது பேருந்­து­களை கொண்டு சென்­ற­போது இ.போ.சபை­யினர் பேருந்­துக்கு முன்­பாக இருந்து  தடுத்து நிறுத்­தி­யுள்­ளனர்.

இதனால் அங்கு பதற்றநிலை ஏற்­பட்­டுள்­ள­துடன் அதி­க­ள­வான பொலி­ஸாரும் குவிக்­கப்­பட்­டனர்.

இது தொடர்பில் தனியார் பேருந்து சங்கத் தலைவர் இ.இரா­ஜேஸ்­வரன் கருத்து தெரி­விக்­கை­யில்,

வட­மா­காண முத­ல­மைச்­சரின் கீழ் உள்ள போக்­கு­வ­ரத்து அமைச்சின் மூலம் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு அமை­வாக வவு­னியா பொலிஸ் நிலை­யத்தில் எமக்­கும் வவு­னியா நக­ர­சபைச் செய­லா­ள­ருக்­கும் இலங்கை போக்­கு­வ­ரத்து சபை­யி­ன­ருக்கும் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கும் இடையில் மூன்று மணி­நேரம் சந்­திப்பு இடம்­பெற்­றது. இதன்­படி எமது தனியார் பேரூந்­து­களின் உள்ளூர் சேவை­யினை நக­ர­ச­பைக்கு சொந்­த­மான பழைய பேருந்து நிலை­ய த்தில் இருந்து நடத்­து­மாறும் குழப்பம் விளைப்­ப­வர்கள் கைது செய்­யப்­ப­டு­வார்கள் எனவும் அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து நாம் பழைய பேருந்து நிலை­யத்­திற்கு சென்ற போது எமது பேருந்­து­களை உள்­நு­ழைய விடாது இ.போ.சபை­யினர் தடுத்து குழப்பம் விளை­வித்­தனர். அவர்­க­ளது செயற்­பாட்­டுக்கு உடந்­தை­யாக வவு­னியா பொலி

­ஸாரும் நடந்து கொண்­டனர். இத­னை­ய­டுத்து வவு­னியா நக­ர­ச­பையில் வட­மா­காண சபை உறுப்­பி­னர்­க­ள­ான ப.சத்­தி­ய­லிங்கம் ஜி.ரி.லிங்­க­நாதன் வட­மா­காண சபை முன்னாள் உறுப்­பினர் செ.மயூரன், உள்­ளூ­ராட்சி உதவி ஆணை­யாளர் நக­ர­சபைச் செய­லாளர் ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது. இதன்­படி எம்­மிடம் 5 நாட்கள் கால அவ­காசம் கேட்­டுள்­ளனர். எதிர்­வரும் 31 ஆம் திக­தி­யுடன் நக­ர­ச­பைக்கு சொந்­த­மான பேருந்து நிலை­யத்­திற்­கான ஒப்­பந்த காலம் இ.போ.சபைக்கு முடி­வு­று­வதால் அதன் பின் அதா­வது முதலாம் திகதி முதல் எந்­த­வொரு பேருந்தும் வவு­னியா பழைய பேருந்து நிலை­யத்­திலோ அல்­லது முத­லாம், இர

ண்டாம் குறுக்கு தெரு­விலோ நிறுத்­து­வ­தற்கு தடை­வி­திக்­கப்­ப­டு­வ­தா­கவும் அதற்­கு­ரிய கடி­தங்கள் சட்ட ரீதி­யாக வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­ப­டு­வ­தா­கவும் வவு­னியா நக­ர­ச­பையால் வழங்­கப்­பட்ட உறு­தி­மொ­ழிக்கு அமை­வாக நாம் புதிய பேருந்து நிலை­யத்தில் இருந்து எமது சேவை­

களை வழங்­கு­கின்றோம் என்றார்.

இ.போ.சபை ஊழியர் தொழிற்­சங்கத் தலை

வர் எஸ்.வாம­தேவன் தெரி­விக்­கையில்,

பழைய பேருந்து நிலையம் வவு­னியா நக­ர­ச­பையால் 99 வருட குத்­த­கைக்கு எம

க்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. நாம் வாடகை செலுத்தி வரு­கின்றோம். எமக்கு உரிய வகை

யில் எதுவும் தெரி­யப்­ப­டுத்­தாது தனியார் பேருந்­து­களை எமது பேருந்து நிலை­யத்­திற்குள் செலுத்த முற்­பட்­டதால் தான் குழப்பம் ஏற்பட்டது. எமது தொழிற்சங்கம் எமது போக்குவரத்து சபை எடுக்கும் தீர்மானத்திற்கு அமைவாகவே எம்மால் செயற்பட முடியும். நாம் மத்திய அரசின் கீழேயே செயற்படுகின்றோம் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை குழப்பம் ஏற்படுத்தி மக்

களது இயல்புக்கு பங்கம் விளைவித் தமைக்காக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் வவுனியா நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதையடுத்து தனியார் பேருந்து சங்கத்தைச் சேர்ந்த மூவருக்கும் இலங்கை போகுவரத்து சபை

சாலை முகாமையாளர் மற்றும் இ.போ.சபை

தொழிற்சங்க உறுப்பினர்கள் இருவருக்கு மாக இன்று ஆறுபேரை  ஆஜராகுமாறு வவு

னியா நீதிமன்றம் அழைப்பாணை விடு த்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58