தொடர்பை சீனா துண்­டிக்கும் அபாயம்.!

Published By: Robert

27 Dec, 2017 | 10:09 AM
image

கொழும்பு துறை­முக நக­ரத்­திட்­டத்­திற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும்  சீன ஜனா­தி­பதி ஆகியோர் இணைந்து நாட்டிய அடிக்­கல்லை தகர்த்து அதனைக் கட­லில்­போட்­டுள்­ளனர். அவ்­வி­டயம் சீனா­விற்குத் தெரி­ய­வந்தால் அந்­நாடு இலங்­கை­யு­ட­னான தொடர்பை தொடர்ந்தும் பேணுமா என்­கின்ற சந்­தேகம் எழுந்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இந்­திக்க அனு­ருந்த தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்­பி­லுள்ள ஸ்ரீவ­ஜி­ரா­ஷர்ம பெளத்த நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­மீ­துள்ள பீதி­யி­னா­லேய இவ்­வா­றான செயற்­பா­டு­களை அர­சாங்கம் மேற்­கொள்­கி­றது. இது போன்ற செயற்­பா­டு­க­ளினால் இலங்­கைக்கும் வெளி­நா­டு­க­ளுக்­கு­மி­டையில் உள்ள உறவில் பாரிய விரிசல் ஏற்­ப­டு­வ­தற்கும் இட­முண்டு.  ஆகவே இலங்­கை­யிடம் தற்­போது நிலை­யான வெளி­நாட்­டுக்­கொள்கை இல்லை என்றே கரு­த­வேண்­டி­யுள்­ளது.

எனவே துறை­முக நக­ரத்­திட்ட அடிக்கல் அகற்­றப்­பட்­ட­மைக்கு எதி­ராக சீனா அர­சாங்கம் எவ்­வா­றான நடிக்கை மேற்­கொள்ளும் என்­ப­தனை பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும். ஆயினும் அந்­நாடு குறித்த விடயம் தொடர்பில் பதில் வழங்­கு­மாக இருந்தால் அதனை எதிர்­கொள்­வ­தற்­கான தலை­மையும் தற்­போ­தில்லை.சீனாவும் எமது நாட்­டு­ட­னான உறவைத் துணை்­டிக்­கு­மாக இருந்தால் நாட்டின் பொரு­ளா­தாரம் எங்கு செல்லும் என்று தெரி­யாது.

நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­யினால் இம்­முறை நத்தார் பண்­டி­கை­யைக்­கூட மக்கள் உரிய வகையில் கொண்­டா­ட­மு­டி­யாத நிலை ஏற்­பட்­டது. கடந்த இரண்­டரை வருட ஆட்­சியில் அர­சாங்கம் நாட்டில் அபி­வி­ருத்­தி­களை ஏற்­ப­டுத்­த­வில்லை. எனினும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­ட­பின்னர் கிரா­ம­மட்­டத்தில் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. ஆகவே அவை வெறும் அர­சியல் நோக்கம் கொண்ட அபி­வி­ருத்­தி­க­ளாகும். 

இது விட­யத்தில் சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு உரிய கவனம் செலுத்தி நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மேலும் குறித்த விவகாரம் தொடர்பில் கடந்த காலங்களில் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தது. எனினும் தற்போது அக்குழுக்களும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38