காய்ச்சல் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகம் , இன்று முதல் மீண்டும் தமது கல்விச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி ரஞ்ஜித் விஜேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு இடையே ஒருவகை வைரஸ் காய்ச்சல் பரவியதன் காரணமாக, கடந்த 19ம் திகதி பல்கலைக்கழகத்திலுள்ள 4 பீடங்கள் மூடப்பட்டிருந்தது.

 இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.