தேர்தல் கடமையில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களா.?

Published By: Robert

27 Dec, 2017 | 09:10 AM
image

எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்ற  தேர்­த­லின் ­போது எக்­கா­ரணம் கொண்டும் வெளி­நாட்டு கண்­கா­ணிப்­பா­ளர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட மாட்­டார்கள்.  அது  அதிக  செலவை ஏற்­ப­டுத்தும் விட­ய­மாகும்  என்று   தேர்தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த  தேசப்­பி­ரிய தெரி­வித்தார். 

அத்­துடன்  நியா­ய­மான  தேர்தல் ஒன்றை நடத்­து­வ­தற்­காக   நாட்டு மக்கள்   முழு­மை­யான ஒத்­து­ழைப்பை எமக்கு வழங்­க­ வேண் டும்.அத்­துடன் தேர்தல் தொடர்பில் மக்­களை  தெ ளிவு­ப­டுத்­து­வதே இங்கு  முக்­கி­ய­மான விட­ய­மாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.  

தேர்தல் திணைக்­க­ளத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அடை­யாள அட்­டை­களை  வைத்­தி­ராத எவ­ருக்கும் வாக்­க­ளிப்­ப­தற்கு அனு­ம­திக்க முடி­யாது.  அதே­போன்று வாக்­க­ளிப்பு நிலை­யத்­தி­லி­ருந்து 400 மீற்­ற­ருக்கு எவரும்  உட்­பு­கா­த­வாரு பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

இதே­வேளை இம்­முறை தேர்­தலில் 25 வீத பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம்  உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.  ஆனால் அதனை  அனைத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­னதும் சரி­யான முறையில் முன்­னெ­டுக்க முடி­யுமா என்­பது கேள்­விக்­கு­ரி­யா­கி­யுள்­ளது என்றும்   தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர்  மஹிந்த தேசப்­பி­ரிய  சுட்­டிக்­காட்­டினார். 

தேர்தல் நடை­மு­றைகள் மற்றும் ஊட­கங்கள்  செயற்­ப­ட­வேண்­டிய விதம் தொடர்பில் நேற்று அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களை சந்­தித்து விளக்­க­ம­ளிக்­கும்­போதே மஹிந்த  தேசப்­பி­ரிய இதனை  தெரி­வித்தார். 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்:

தேர்தல்  பெப்­ர­வ­ரி­மாதம் 10 ஆம்­தி­க­தி­ந­டை­பெ­ற­வுள்­ளமை அனை­வரும் அறிந்த விட­ய­மாகும். வேட்­பு­ம­னுக்கள் தாக்கல்  செய்­யப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் தேர்தல் சட்­டங்கள் இன்று முதல் (நேற்று) உரிய முறையில் அமுல்­ப­டுத்­தப்­பட ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.  தேர்தல் நாளை நடை­பெ­ற­போ­கின்­றது என்ற தொனி­யி­லேயே அர­சி­யல்­வா­திகள் செயற்­பட்டு வரு­கின்­றனர்.  ஆனால்  இங்கு  வாக்­கா­ளர்கள் தெளி­வ­டை­ய­வேண்­டி­யதே மிகவும் முக்­கி­ய­மா­கின்­றது.  நீதி­யான  ஒரு தேர்­தலை நடத்­து­வ­தற்கு பொது­மக்கள் எங்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும். எனவே ஊட­கங்கள் இந்த விட­யத்தில் பொது­மக்­க­ளுக்கு விட­யங்­களை  தெளி­வு­ப­டுத்தும் செயற்­பாட்டை முன்­னெ­டுக்­க­வேண்டும் என கோரு­கின்றோம். வாக்­கா­ளர்கள்  தெளி­வு­ப­டுத்­தப்­ப­டு­வ­தி­லேயே அனைத்தும் தங்­கி­யுள்­ளன. 

ஊட­கங்கள் தேர்தல் காலத்தில்  நியா­ய­மான முறையில் நடந்­து­கொள்­ள­வேண்டும். அனைத்து வேட்­பா­ளர்­க­ளுக்கும் சம சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வேண்டும். எக்­கா­ரணம் கொண்டும்  அநீ­தி­யான முறையில் நடந்­து­கொள்ள கூடாது.  ஜனா­தி­பதி மற்றம் பிர­தமர் ஆகி­யோரின்   அர­சியல் உரைகள் தொடர்­பா­கவும் சம சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வேண்டும்.  இம்­முறை தேர்தல் புதிய முறையில் நடை­பெ­று­வதால்  இது­தொ­டர்­பான  தெளிவும் அவ­சி­ய­மா­கின்­றது. குறிப்­பாக   புதிய தேர்தல் முறை­மையின் ஊடாக பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம் 25 வீதம் உறு­திப்­ப­டுத்­த­வேண்டும் எனக் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.  அந்தப் பொறுப்பு எமக்கே வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால்  அனைத்து   உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிலும் இதனை சரி­யான முறையில்  முன்­னெ­டுக்க   முடி­யுமா என்­பது   கடி­ன­மான காரி­ய­மாகும். என்னைப் பொறுத்­த­வ­ரையில் அனைத்து உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தல்­க­ளிலும்   25 வீத பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை  உறு­திப்­ப­டுத்த முடி­யா­மல்­போகும் என்றே கரு­து­கின்றோம். 

தேர்தல்  காலை 7 மணி முதல் மாலை 4 மணி­வரை நடை­பெறும். 4.30 மணிக்கு  வாக்­கு­களை எண்ண ஆரம்­பித்­து­வி­டுவோம்.  6 மணி­ய­ளவில்  வாக்கு எண்­ணிக்கை நிறை­வ­டைந்து அந்­தந்த  வாக்கு எண்ணும் நிலை­யங்­களில் முடிவை அறி­விக்க முடியும். வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளி­லேயே வாக்கு எண்ணும் நட­வ­டிக்கை இடம்­பெறும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

கேள்வி: சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்கள் வர­வ­ழைக்­கப்­ப­டு­வார்­களா?

பதில்: இல்லை. இம்­முறை தேர்­தலை கண்­கா­ணிக்க சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்கள்  வர­ழைக்­கப்­ப­ட­மாட்­டார்கள். அது அதிக செலவைக் கொண்­டது. அந்த அவ­சியம் இல்லை.  உள்­நாட்டில் 10க்கும்­மேற்­பட்ட  கண்­கா­ணிப்பு அமைப்­புக்கள் உள்­ளன. அவை­களில்  இரண்டு  அமைப்­புக்­க­ளுக்கு  வாக்­க­ளிப்பு நிலையம்  செல்லும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது  உண்­மையில் நாம் அர­சியல் வாதி­களை மதிக்­க­வேண்டும். இந்த நாட்டை  அர­சி­யல்­வா­தி­களே நிர்­வ­கிக்­கின்­றனர்.  ஆனால்  எமது நாட்­டி­லேயே  அர­சி­யல்­வா­தி­களை குறைத்து மதிப்­பி­டு­கின்றோம். 

கேள்வி:  வாக்­க­ளிக்க  எவ்­வா­றான அடை­யாள அட்­டைகள் அங்­கீ­க­ரிக்­கப்­படும்

பதில்: அது ஏற்­க­னவே அனை­வ­ருக்கும் தெரிந்த விட­ய­மாகும்.  தேசிய அடை­யாள அட்டை,  அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சாரதி அனு­ம­திப்­பத்­திரம், செல்­லு­ப­டி­யான கட­வுச்­சீட்டு,  முதியோர் அடை­யாள அட்டை, ஓய்­வூ­திய அடை­யாள அட்டை, மத குருக்­க­ளுக்­கான அடை­யாள அட்டை, தேர்தல் திணைக்­க­ளத்­தினால் வழங்­கப்­படும்  அடை­யாள அட்டை ஆகி­ய­னவே   தேர்­த­லுக்கு செல்­லு­ப­டி­யான அடை­யாள அட்­டை­க­ளாகும்.   கடந்த  ஜனா­தி­பதி, மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில்  பயன்­ப­டுத்­திய தற்­கா­லிக அடை­யாள அட்­டை­களை  இம்­மு­றையும்  பயன்­ப­டுத்த முடி­யுமா என்­பது குறித்து ஆராய்­கின்றோம். 

இதே­வேளை  இம்­முறை  தபால்­மூல  தேர்தல் முடி­வுகள்   அறி­விக்­கப்­ப­டாது. அனைத்து  வாக்­க­ளிப்பு அட்­டை­களும் ஒன்­றாக  சேர்த்தே  எண்­ணப்­படும்.  மேலும் 10ஆம்­தி­கதி தேர்தல் நடை­பெ­ற­வுள்ள  நிலையில் 7ஆம் திகதி நள்­ளி­ரவு 12 மணி­யுடன்   பிர­சா­ரப்­ப­ணிகள் முடி­வ­டைந்­து­விடும். அதன்­பின்னர்  பிர­சா­ரப்­ப­ணி­களை முன்­னெ­டுத்தால் கடும்  நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.  

கேள்வி: நிரா­க­ரிக்­கப்­பட்ட வேட்­பு­ம­னுக்கள் தொடர்பில் வழக்­குப்­போ­டப்­பட்­டுள்­ளதே?

பதில்: நாம் வேண்­டு­மென்றே எந்த வேட்புமனுவையும் நிராகரிக்கவில்லை.  மாறாக  குறைபாடுகள் காணப்பட்டவையே நிராகரிக்கப்பட்டன எனவே வழக்கு விசாரணையின்போது எமது பக்கத்தில் உறுதியாக இருப்போம். 93 சபைகளுக்கான  வேட்புமனுத்தாக்கலின்  போது 23 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.  248 சபைகளுக்கான வேட்புமனுவின்போது 29 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.  மொத்தமாக 52 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

கேள்வி: மொத்தமாக எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

பதில்: மொத்தமாக  எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்  என்ற விபரத்தை உடனடியாக கூற முடியாது. மேலும் ஒவ்வொரு கட்சியும் எத்தனை சபைகளில் போட்டியிடுகின்றன என்பதை விரைவில் வெளியிட எதிர்பார்க்கின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55