கடந்த மாதங்களில் கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட நாகை மாவட்ட 38 மீனவர்களும் ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர் வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று 3ஆவது முறையாக  வழக்கை விசாரித்த நீதிமன்ற பதில்  நீதிவான் சபேஷன் மீனவர்களை எதிர்வரும் எதிர் வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து மீனவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இன்று வரை 140  தமிழக மீனவர்கள்  சிறைக்காவலில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.