திருமணத்திற்கு பின் சமந்தா நடிப்பில் வெளியாகும் படத்தில் அவர் உளவியல் நிபுணராக நடித்திருக்கிறார்.

விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் இரும்பு திரை. இப்படத்தில் மூத்த நடிகர் அர்ஜுன் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அத்துடன் டொக்டர் ரதிதேவி என்ற உளவியல் நிபுணர் கேரக்டரில் நடிகை சமந்தா நடிக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது,‘ படத்தில் வித்தியாசமான கேரக்டர். ஹீரோ குழப்பதிற்கு ஆளாகும் போதெல்லாம் அவருக்கு ஏற்பட்டிருப்பது எம்மாதிரியான கவன சிதறல் என்பதை உளவியல் ரீதியாக எடுத்துரைத்து அவருக்கு நம்பிக்கையூட்டும் கேரக்டரில் நடித்திருக்கிறேன். இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.’ என்றார். இரும்பு திரை அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்