எமது அரசியல் நிலைப்பாடு குறித்து வருகின்ற 31 ஆம் திகதியன்று அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த்  தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் தன்னுடைய ரசிகர்கள் முன்னிலையில் பேசுகையில்,

‘ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ரசிகர்களை பார்த்தவுடனேயே தனக்குள் புத்துணர்வு ஏற்பட்டுள்ளது. கதாநாயகன் ஆசையில் நான் சினிமாவுக்கு வரவில்லை. ரஜினி ஸ்டைல் என முதலில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மகேந்திரன் தான்.

எனது பிறந்த நாளின்போது நான் தனியாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். இந்த முறை என்னை பார்க்க ரசிகர்கள் அதிகளவில் வந்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்ததற்காக வருந்துகிறேன். எனது அரசியல் பிரவேசம் பற்றி மக்களை விட ஊடகங்கள் தான் அதிக ஆர்வத்தில் இருக்கின்றன.

போர் என்றால் அரசியல் என்று தான் அர்த்தம். அரசியல் எனக்கு புதிது அல்ல, அரசியல் பற்றி தெரிந்ததால் தான் வர தயங்கிறேன். போரில் ஜெயிப்பதற்கு வீரம் மட்டும் போதாது, வியூகம் வேண்டும். கட்டுப்பாடும், ஒழுக்கமும் மிக அவசியம். தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31 ஆம் திகதியன்று அறிவிப்பேன். ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் எதிர்மறை விமர்சனங்களை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். குடும்பத்தின் மீது அக்கறை காட்டுங்கள்.’ என்று பேசினார்.

தகவல் : சென்னை அலுவலகம்