எமிரேட்ஸ் விமானங்கள் தலைநகர் துனீசில் தரையிறக்கப்படுவதற்கு துனீசியா தடை விதித்துள்ளது.

துனீசிய பெண்கள் சிலருக்கு எமிரேட்ஸ் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலேயே இந்த தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எமிரேட்ஸ் விமானச்சேவை நிறுவனத்தின் இச்செயற்பாடானது துனீசியாவின் ஆத்திரமூட்டலுக்கு உள்ளாகியுள்ள அதேவேளை இது இனவாத பாகுபாட்டு செயல் என உரிமைக் குழுக்களும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

எமிரேட்ஸ் நிறுவனம் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க விமானச் சேவைகளை இயக்கும்வரை இந்த தடையானது நடைமுறையில் இருக்கும் என துனீசிய போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து துனீசியாவுடன் கலந்துரையாடி வருவதாகவும் துனீசிய பெண்களை தாம் மதிப்பதாகவும் ஐக்கிய அரபு ராச்சியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.