பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆகோ நகரில் பஸ் விபத்துக்குள்ளானதில் கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஆகோ நகரைச் சேர்ந்த சிலர் மனோவோக் நகரிலுள்ள தேவாலயத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனையில் கலந்து கொள்வதற்காக பஸ்ஸில் சென்றுள்ளனர்.

புறப்பட்டு சில மணிதுழியில் எதிரே வந்த மற்றொரு பஸ் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.

இந்த கோர விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.