பிபா கால்­பந்­தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் சம்­பியன் கிண்ணம் எதிர்­வரும் ஜன­வரி மாதம் இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வி­ருக்­கின்­றது. அதிலும் முக்­கி­ய­மாக இந்தக் கிண்ணம் முதல் முறை­யாக இலங்கை வரு­கி­றது. 

2018  உல­கக்­கிண்ண கால்­பந்து போட்­டியின் வெற்­றிக்­கிண்­ணத்தை உலகம் பூரா­கவும் கொண்டு செல்லும் பய­ணத்தின் முத­லா­வது நாடாக இலங்கை தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

அது­மட்­டு­மன்றி தெற்­கா­சிய நாடு­க­ளி­லேயே இலங்­கைக்கு அடுத்து பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடு­க­ளுக்கு மட்­டுமே இந்தக் கிண்ணம் கொண்­டு­செல்­லப்­ப­ட­வி­ருக்­கின்­றது என்­பதும் விசேட அம்­ச­மாகும்.

எதிர்­வரும் 2018 ஆம் ஆண்டில் ரஷ்­யாவில் இடம்­பெ­ற­வுள்ள உல­கக்­கிண்ண கால்­பந்து போட்டித் தொடரின் வெற்­றிக்­கிண்­ணமானது சகல மக்­களும் கண்­டு­க­ளிப்­ப­தற்­காக 23 நாடு­க­ளுக்கு கொண்டு செல்­லப்­ப­ட­வுள்­ள­துடன் அவ்­வாறு கொண்டு செல்­லப்­ப­ட­வுள்ள முத­லா­வது நாடாக இலங்கை தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

2018 ஜன­வரி மாதம் 23 ஆம் திகதி இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள வெற்றிக்கிண்ணத்தை கால்பந்து ரசிகர்கள் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட வுள்ளமை குறிப்பிடத்தக்கது.