ரஜினிக்கு போட்டியாக கமல்ஹாசன்

25 Dec, 2017 | 02:59 PM
image

அரசியல் பிரவேசம் குறித்து கமல் அடுத்த மாதம் அறிவிப்பார் என்று சேலத்தில் நடந்த நற்பணி இயக்கத்தின் போது நற்பணி மன்ற தேசிய பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ட்வீட்டரில் கருத்து தெரிவித்தார். பின்னர் ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தார்.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்ட்ட நிலையில் கமலஹாசன் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது நற்பணி இயக்கத்தின் அகில இந்திய பொறுப்பாளர் கோவை ஆர். தங்கவேலு மீண்டும் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட கமலஹசன் நற்பணி இயக்கம் சார்பில் முப்பெரும் விழா சேலத்தில் நடந்தது. இதில் கோவை தங்கவேலு கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சேலம் மாவட்ட பொறுப்பாளர் பாலசந்தர் மற்றும் நற்பணி இயக்கத்தினர் திரளாக பங்கேற்றனர்.

பின்னர் கோவை ஆர். தங்கவேலு நிருபர்களிடம் கூறுயதாவது,

நடிகர் கமலஹாசன் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டார். அரசியல் பயணத்துக்கான செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது விஸ்வரூபம்-2 படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த பணிகளை முடித்துவிட்டு இம்மாத இறுதியில் தமிழகம் வர உள்ளார்.

ஜனவரி மாதத்தில் அரசியல் பிரவேசம் குறித்து கமல் அறிவிக்க உள்ளார். கடந்த மாதம் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த கமல் இனி மேல் ஒவ்வொரு ஊரிலும் ரசிகர்கள், மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

அரசியல் பயணத்தை கமல்ஹாசன் தொடரும் போது கலைப் பயணத்தில் இருந்து விடுபடுவார் என்று எதிர்பார்க்கிறோம். ரஜினிகாந்தை இதுவரை போட்டியாக நினைத்தது இல்லை. அவருடன் இணைந்து செயல்படுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு.

கடந்த 39 வருடங்களாக இயக்க பணியை மட்டும் மேற்கொண்டு வருகிறோம். அரசியல் தங்களுக்கு புதிது என்பதால் அதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். கமல் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தனியாகவே செயல்படுவார்.

திரைத்துறையை சேர்ந்த கமல் நிச்சயம் முதல்வராக வருவார். தமிழகத்தில் தற்போது மோசமான அரசியல் நடைபெற்று வருகிறது. அதை முடிவுக்கு கொண்டு வர நேர்மையான ஆட்சியை வழங்குவார். மக்களும் அவரை முழுமையாக நம்புகிறார்கள். இதனால் அவர் அரசியலில் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அறிவிப்பால் கமல் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபட போவது உறுதியாகி உள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35