தென் பிலிப்பைன்ஸின் டவோ  நகரிலுள்ள 4 மாடிகளைக் கொண்ட வர்த்தக மையத்தில் ஏற்பட்டுள்ள பாரிய  தீ விபத்துக் காரணமாக சுமார் 37 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்தத் தீ விபத்தில் எரிகாயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி வர்த்தக மையத்தின் மூன்றாம் மாடியில் அமைந்துள்ள தளபாடக் கடையொன்றில் கடந்த சனிக்கிழமை  தீ பரவியுள்ளது. இருப்பினும் இந்தத் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லையெனவும் இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் வர்த்தக மையத்தில் கடமையாற்றும் தொழிலாளர்கள் எனவும்  ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.