சீனா­வி­லுள்ள  பனிச்­ச­றுக்கு விளை­யாட்டு  பிராந்­தி­யத்தில் அந்­நாட்டு கலை­ஞர்கள் பனிக்­கட்­டி­களால் 80  யார் நீளமும் 20  யார் அக­லமும் கொண்ட இராட்­சத கடல்­நாகக் (ட்ரகன்)  கட்­ட­மைப்பை உரு­வாக்கி வரு­கின்­றனர்.  ஜிலின் மாகா­ணத்­தி­லுள்ள சங்சுன் எனும் இடத்தில் கடந்த 18  ஆம் திகதி ஆரம்­ப­மான மேற்­படி  பனிக்­கட்டி கடல்­நாக கட்­ட­மைப்பை  உரு­வாக்கும் பணிகள் இந்த மாத இறு­தியில் பூர்த்­தி­ய­டையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அந்தக் கலை­ஞர்கள் கூறு­கின்­றனர்.   

 இந்தக்  கட்­ட­மைப்பை உரு­வாக்கும் பணியில் 100  க்கு மேற்­பட்ட நிர்­மாணக் கலை­ஞர்கள் பங்­கேற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 இந்த  கடல்­நாகக் கட்­ட­மைப்பு  எதிர்­வரும் ஆண்டு ஜன­வரி நான்காம் திகதி ஆரம்­ப­மாகும் ஜிங்­யு­யதன் வஸ­லொப்பெட் சர்­வ­தேச பனிச்­ச­றுக்குத் திரு­வி­ழாவில்  காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.