பர்­மிங்­ஹாமில் 2022-இல் நடை­பெ­ற­வி­ருக்கும் கொமன்வெல்த் போட்­டியில் துப்­பாக்கி சுடுதல் போட்­டிக்குப் பதி­லாக இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டியை சேர்க்க பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

பிரிட்டன் காலனி ஆதிக்­கத்தின் கீழ் இருந்த நாடு­க­ளுக்கு இடையே நான்கு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை கொமன்வெல்த் போட்டி என்ற மிகப்­பெ­ரிய விளை­யாட்டுத் தொடர் நடத்­தப்­பட்டு வரு­கி­றது. 

ஒரு நாட்டில் விளை­யாட்டு நடத்­தப்­ப­டும்­போது அந்த நாடு 7 போட்­டி­களை சேர்க்க பரிந்­துரை செய்­யலாம். அதன்­படி தற்­போது ஜூடோ, டேபிள் டென்னிஸ், மல்­யுத்தம், ஜிம்­னாஸ்டிக், டைவிங், சைக்­கிளிங், கூடைப்­பந்து ஆகிய போட்­டி­களை சேர்க்க பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. துப்­பாக்கி சுடுதல் போட்­டி விருப்ப போட்­டி­யாக வைக்கப்பட்டுள்ளது. 

இதே­நே­ரத்தில் ‘ஆண்கள், - பெண்கள் இணைந்து விளை­யாடும் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டிக்கும் (Mixed Gender Twenty20 cricket )’ பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

ஒரு­வேளை இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடர் ஏற்­கப்­பட்டால் கொமன்வெல்த் போட்டியிலிருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.