இலங்கைக் கிரிக்கெட் அணியின் கடைசி நம்­பிக்­கை­யாக வந்து சேர்ந்தி­ருக்­கிறார் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க.

இவரின் பயிற்­சியின் கீழ் கற்றுக்­குட்­டி­யாக இருந்த பங்­க­ளாதேஷ் அணி கிரிக்­கெட்டில் கொடி கட்டிப் பறக்கும் அனைத்து அணி­க­ளுக்கு எதி­ரா­கவும் வெற்­றி­களைக் குவித்து தனி இடத்தை கிரிக்கெட் உலகில் பிடித்­து­விட்­டது.

இவை அனைத்­திற்கும் கார­ண­மா­னவர் இலங்­கை­ய­ரான சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கதான்.

அந்­த­வ­கையில் அவர் தற்­போது இலங்கை அணியை பொறுப்­பேற்­றுள்ளார். இலங்கை அணி திற­மை­யான அணிதான். அதில் எவ்­வித மாற்றுக் கருத்தும் சொல்­வ­தற்­கில்லை. ஆனால் எப்­படி வெற்­றி­பெற வேண்டும் என்­ப­து தற்­போது அவர்­க­ளுக்கு தெரி­ய­வில்லை என்­ப­துதான் நிஜம்.

இது இப்­ப­டி­யி­ருக்க இலங்கை அணியை கையி­லெ டுத்த சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க 2019ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ணத் தொட­ருக்­கான இலங்கை அணியை தயார்­ப­டுத்தும் வேலை­களில் இறங்­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

2019 உலகக் கிண்ண அணியை தயார்­ப­டுத்தும் அதே­வே­ளையில் அணித் தலை­மையில் மாற்றம் செய்­யவும் அவர் கோரிக்கை விடுத்­துள்­ள­தா­கவும் அறி­யக்­கி­டைக்­கின்­றது.

அந்­த­வ­கையில் தற்­போது ஒருநாள் அணிக்கு தலை­வ­ராக செயற்­பட்­டு­வரும் திஸர பெரேராவுக்கு பதிலாக அந்தப் பொறுப்பு டெஸ்ட் அணித் தலைவர் சந்திமாலுக்கு வழங்கப்படலாம் என்றும் தெரிவிக் கப்படுகிறது.