இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும் சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ரு­மான அஞ்­சலோ மெத்­தியூஸ் காலில் ஏற்­பட்ட காயம் கார­ண­மாக இந்­தி­யா­வுக்கு எதி­ராக நேற்று நடை­பெற்ற கடைசி இரு­ப­துக்கு 20 போட்­டி­யி­லி­ருந்து வில­கினார். அதே­வேளை எதிர்­வரும் ஜன­வரி மாதம் நடை­பெ­ற­வுள்ள பங்­க­ளாதேஷ் தொட­ரிலும் அவர் பங்­கேற்­பது சந்­தே­கம்தான் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

இந்­தூரில் நடை­பெற்ற இரண்­டா­வது இரு­ப­துக்கு 20 போட்­டியில் பந்து வீசி­ய­போது மெத்­தி­யூ­ஸுக்கு காயம் ஏற்­பட்­டது. இதனால் நேற்றைய கடைசி போட்­டியில் அவர் விளை­யா­ட­வில்லை. 

இந்­நி­லையில் இலங்கை ஒருநாள் அணி எதிர்­வரும் ஜன­வரி மாதம் பங்­க­ளா­தே­ஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு முக்கோணத் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத்தொடரிலும் அவர் விளையாடுவது சந்தே கம்தான் என்று தெரிவிக்கப்படுகின்றது.