சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - வைபவி சாண்டில்யா நடிப்பில் உருவாகி வரும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் முதல் பார்வைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

`ஹரஹர மஹாதேவகி' படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, `கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். 

இந்த இரு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாகவும், வைபவி சாண்டில்யா நாயகியாகவும் நடிக்கின்றனர். அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இதன் டைட்டில் லுக்கே சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை ஆர்யா இன்று வெளியிட்டார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டு, சமூக வலைத்தளத்தில் டிரென்ட்டாகி உள்ளது.