சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆறாம் சுற்று முடிவடைந்த நிலையில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21 ஆம் திகதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும். 

பதிவான வாக்குகளை எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியில் அமைதியான முறையில் நடந்து வருகிறது. தற்போது 6ம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் கீழே : 

டி.டி.வி தினகரன்- 29,267

அ.தி.மு.க-15,184

தி.மு.க-7,983

நாம் தமிழர்-1,245

பா.ஜ.க-408

சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரன் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.