பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் விஷேட பஸ் போக்குவரத்து சேவைகள் செயற்படுத்தப்படவுள்ளன. இலங்கை போக்குவரத்து சபைக்கு சபைக்கு சொந்தமான 150 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

பண்டிகை காலத்தை முன்னிட்டு பெரும்பாலானோர் கொழும்பில் இருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கும் பின்னர் மீண்டும் கொழும்பு திரும்புவதற்கும் இந்த மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரதி முகாமையாளர் பி.எஸ்.ஆர்.டி சந்திர சிறி தெரிவித்தார். 

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வேலை நிமித்தம் கொழும்பில் வசிக்கும் மக்கள் பண்டிகைக் காலங்களில் தங்களது சொந்த வதிவிடங்களுக்கு செல்வார்கள். இதன்போது ஏற்படும் சன நெரிசல் மற்றும் போக்குவரத்தின் ஏற்படும் அசௌகரியங்களை குறைப்பதற்காகவும் பயணிகள் நலன் கருதியும் இவ்வாறு மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.