ஐ.நா. விசா­ரணை அதி­காரி மியன்­ம­ாருக்குள் நுழையத் தடை

Published By: Robert

24 Dec, 2017 | 09:18 AM
image

ஐ.நா.வின் மனித உரிமை விசா­ரணை அதி­காரி தங்கள் நாட்­டுக்குள் நுழைய மியன்மார் தடை விதித்­துள்­ளது. 

மியன்­மாரில் ரக்கைன் மாகா­ணத்தில் ரோஹிங்யா முஸ்­லிம்கள் மீது நடத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும் தாக்­கு­தல்கள் உட்­பட, மியன்­மாரின் மனித உரி­மைகள் குறித்து ஆய்வு நடத்­து­வ­தற்­காக விசா­ரணை அதி­காரி யாங்ஹீ லீ  மியன்மார் செல்ல இருந்தார். ஆனால், அவர் தனது பணியைச் செய்யும் போது நடு­நி­லை­யாக இல்­லா­ததால் மியன்­மா­ருக்கு வர தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அரசு கூறி­யுள்­ளது. 

ரக்­கைனில் ஏதோ மோச­மான செயல் நடக்­கி­றது என்­பதை தனக்கு தடை விதிக்­கப்­பட்ட முடிவு காட்­டு­கி­றது என யாங்ஹீ லீ கூறி­யுள்ளார். அண்­மையில் ரக்­கைனில் ஒரு கிரா­மத்தில் உள்ள புதை­கு­ழியில் 10 உடல்கள் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக மியன்மார் அதி­கா­ரிகள் கூறி­யுள்­ளனர். 

 மேலும், கடந்த ஜூலை மாதம் மியன்­மா­ருக்கு சென்ற யாங்ஹீ லீ, மியன்­மாரில் ரோஹிங்யா முஸ்­லிம்கள் நடத்­தப்­படும் விதம் குறித்து கவ­லை­ தெரிவித்திருந்தார். அத்­துடன்,  தன்­னு­டைய பய­ணத்­துக்கு தடை விதித்து மியன்மார் எடுத்­துள்ள முடிவு, தனக்கு குழப்­பத்­தையும் ஏமாற்­றத்­தையும் அளித்­துள்­ள­தாக லீ கூறி­யுள்ளார். முன்­ன­தாக அவர் பல முறை மியன்­மா­ருக்கு பயணம் செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தமை  குறிப்­பி­டத்­தக்­கது. லீயின் பணி ஒரு­த­லை­ப்பட்­ச­மாக இருப்­ப­தாலும், அவர் மீது நம்பிக்கை இல்லாததாலும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மியன்மார் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி

2024-04-20 11:42:55
news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08