மிகின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கா எயார்லைனஸ் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை இம்மாதம் 31ம் திகதி கிடைத்த பின்னர், இந்தக் குழு நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.