300 ஆண்டுகள் பழமையான புத்தகங்களை டிஜிட்டலாக மாற்றும் கூகுள்!!!

Published By: Digital Desk 7

23 Dec, 2017 | 02:40 PM
image

உலகின் நம்பர் ஒன் தேடல் நிறுவனமான கூகுள் பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ள 300 ஆண்டுகால பழமையான நூல்களை டிஜிட்டல் வடிவிற்கு மாற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.

கூகுள் புக்ஸ் மற்றும் பிரிட்டிஷ் நூலகம் இடையே செய்யப்பட்டுள்ள  ஒப்பந்தத்தின் அடிப்படையில் பழமையான நூல்கள், சிறப்பான முறையில் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கி.பி 1700 முதல் 1870 ஆண்டுகளில் வெளிவந்த சுமார் 4 கோடி பக்கங்கள் கொண்ட புத்தகங்களை பிரிட்டிஷ் நூலகம் பாதுகாத்து வைத்துள்ளது. இந்த புத்தகங்களின் பாதுகாப்பு தன்மையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இந்த நூல்களை படிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதனை கருத்தில் கொண்டு இந்த புத்தகங்களை டிஜிட்டல் வடிவில் மாற்ற கூகுள் முடிவு செய்துள்ளது.

இப் பணிகள் முடிந்த பின்னர் பொதுமக்கள்  பழமையான புத்தகங்களை டிஜிட்டல் வடிவில் எளிதாகப் பெற்றுப் பயன்படுத்தலாம்.

இந்த டிஜிட்டல் மயமாக்குவதற்கு தேவையான அனைத்து செலவுகளையும் கூகுள் ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் இத் திட்டம் தொடங்கப்பட்டு சில நூல்கள் டிஜிட்டல் வடிவில் வந்துள்ளதாகவும், இன்னும் ஒருசில ஆண்டுகளில் முழுமையான டிஜிட்டல் வடிவத்தை இந்த புத்தகங்கள் பெற்றுவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right