2022 கொமன்வெல்த் போட்டிகளை நடத்த தயாராகும் பர்மிங்ஹாம்

Published By: Robert

23 Dec, 2017 | 11:22 AM
image

2022ஆம் ஆண்டு பொது­ந­ல­வாய நாடு­களின் விளை­யாட்டுப் போட்­டிகள் இங்­கி­லாந்தின் பர்­மிங்ஹாம் நகரில் நடை­பெ­ற­வுள்­ளன. 

இதற்­கான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பை பொது­ந­ல­வாய நாடுகள் அமைப்பின் தலைவர் லூயிஸ் மார்ட்டின் நேற்­று­முன்­தினம் வெளி­யிட்டார்.

ஆபி­ரிக்க கண்­டத்தில் முதற்­த­ட­வை­யாக நடை­பெ­ற­வி­ருந்த பொது­ந­ல­வாய நாடு­களின் விளை­யாட்டுப் போட்­டி­களை 2022ஆம் ஆண்டு தென்­னா­பி­ரிக்­காவின் டர்பன் நகரில் நடத்­து­வ­தற்கு அந்­நாட்டு அரசு விண்­ணப்­பித்­தி­ருந்­தது. 

எனினும், பொரு­ளா­தார நெருக்­கடி, டர்பன் நகரில் உரிய வச­திகள் இல்­லாமை மற்றும் போதி­ய­ளவு அனு­ச­ர­ணை­யா­ளர்கள் கிடைக்­காமை போன்ற கார­ணங்­களால் அப்­போட்­டி­களை நடத்­து­வ­தி­லி­ருந்து விலகிக் கொள்­வ­தாக தென்னாபிரிக்கா அறி­வித்­தது.

போட்டிகளை நடத்துவதற்கான உரிய வேலைத்­திட்­டங்­களை சமர்­ப்பிக்க தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு பொது­ந­ல­வாய நாடு­க­ளினால் வழங்­கப்­பட்ட காலக்­கெடு நிறை­வ­டைந்­துள்ள நிலையில், தென்­னா­பி­ரிக்கா தாமா­கவே முன்­வந்து வில­கிக்­கொள்­வ­தாக அறி­வித்­தது.

எனவே, குறித்த போட்­டி­களை நடத்­து­வ­தற்கு பிரித்­தா­னி­யாவின் லிவர்பூல் மற்றும் பர்­மிங்ஹாம் ஆகிய நக­ரங்கள் விண்­ணப்­பித்­தி­ருந்­தன. 

இரு நகரங்களும் ஒரே நாட்டைச் சார்ந்ததால் இறுதியில் பர்மிங்ஹாமில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேற்கொண்டு எந்த நகரமும் விருப்பம் கோராததால் பர்மிங்ஹாமின் வெற்றி உறுதியானது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49