த்ரில்லர் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு என்றுமே ஆர்வம் இருக்கும் .கொலைக்காரன் யாரென்று தெரியாமல், இவனாக இருக்குமோ, அவனாக இருக்குமோ என்று ரசிகர்களை யூகிக்க வைப்பதே இயக்குனர்களுக்கு பெரும் சவால். அத்தகைய  படங்களில் ஒன்றுதான் சவாரி. ரசிகர்களை நாற்காலியின் நுனியில்   உட்கார வைக்கும் தகுதி படைத்த படங்கள் என்றுமே வெற்றி பெரும் என்பது இந்தப் படத்துக்கு கிடைத்த கூடுதல் பலம்.

அறிமுக இயக்குனர் குகன் சென்னியப்பன்  கூறும் போது ' இன்றைய காலக் கட்டத்தில் நமக்கு எதிலும் வேகம், எல்லாவற்றிலும் வேகம். படம் பார்க்கும் ரசிகர்கள் கூட வேகமான தட தட என ஓடும் திரைக் கதை உள்ளப் படங்களைத் தான் ரசிக்கின்றனர்.ரோடு  த்ரில்லர்  என்ற புதிய பாணியில் இந்தக் கதை  எழுதப் பட்டு இருக்கிறது. புதிய தொழில் நுட்பக் கலைகளுடன் ஜொலிக்கும் இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும' என்றார்.

அடுத்த மாதம் வெளி வர உள்ள 'சவாரி'  உரிமையை பெற்று உள்ள புதிய பட நிறுவனமான Entertainment brothers நிறுவனத்தினர் 'இணைய தளங்களில் சவாரி படத்தின் போஸ்டர்களை கண்டதில் இருந்தே எனக்கு படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கூடுதலாய் இருந்தது. எதேச்சையாக எனது நண்பர் ஒருவர் மூலம் இந்தப் படத்தின் பிரத்தியேக காட்சி ஒன்றை பார்க்க நேர்ந்தது. படம் தொடங்கிய வினாடி முதல் பரப்பான இடைவேளை வரை எனக்கு  பிரமிப்புதான். இடைவேளையின் போதே எப்படியாவது இந்தப் படத்தை வாங்கி விட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தேன். படம் முடியும் போது என் முடிவு தீர்மானமாய் மாறிப் போனது.இந்தப் படத்தில் உள்ள வேகம், படத்தில் பணியாற்றி உள்ள இளைஞர்களின் உத்வேகம் என்பது அவர்களை சந்தித்த பிறகுதான் தெரிந்துக் கொண்டேன். இயக்குனர் குகன் சென்னியப்பனின் இயக்கமாக  இருக்கட்டும்,ஒளிப்பதிவாளர்  செழியனின் நேர்த்தியான ஒளிப்பதிவாக இருக்கட்டும், மறைந்த கிஷோரின் படத்தொகுப்பில், ஜில் ஜங் ஜக்  படத்தின் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் ஆகட்டும்,படத்தின் தொழில்  நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக  இருப்பார்கள் என்பது நிச்சயம். 

படத்தை  பார்த்த வினாடியே புரிந்துக் கொண்டேன். அடுத்த மாதம் வெளி வர உள்ள 'சவாரி 'ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் மிக மிக நம்பிக்கை உள்ளது' என்றனர்.

தகவல் : சென்னை அலுவலகம்