சப்ரகமுவ மாகாண ஊடகவியலாளர்களுக்கான 2018 ஆம் ஆண்டுக்கான இலவச பயணச் சீட்டு வழங்கும் நிகழ்வு எதிர்வரும்  27 ஆம் திகதி இரத்தினபுரி சமுர்த்தி மண்டபத்தில் காலை  10 மணிக்கு நடைபெறவுள்ளது.

வருடாந்தம் இடம்பெற்று வரும் இந்நிகழ்வு இம் முறை சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேராவின் பணிப் புரைக்கமைய சப்ரகமுவ மாகாண போக்குவரத்து அதிகார சபை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இத்தினம் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து கொண்டு வருமாறு சகல ஊடகவியலாளர்களையும் போக்கு வரத்து அதிகார சபையின் செயலாளர்.ஸ்ரீயாணி பத்மலதா ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.