உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் கொழும்பு மாந­கர சபைக்­கான வேட்­பாளர் பட்­டி­யலில் இணைக்க தயா­ராக இருந்த ஒரு­வரின் பெயரை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­யிட்டு நீக்­கி­யுள்ளார்.

பிர­பல பாதாள உல­கக்­கு­ழுவின் தலை­வரின் மகனின் பெயரே இவ்­வாறு நீக்­கப்­பட்­டுள்­ளது.

சம்­பந்­தப்­பட்ட பாதாள உல­கக்­குழுத் தலைவர் வெளி­நாட்டில் தலை­ம­றை­வா­கி­யுள்­ள­துடன், அவ­ரது மகனை ஐக்­கிய  தேசியக் கட்­சியின் வேட்­பாளர் பட்­டி­யலில் இணைக்க அந்த கட்­சியின் கொழும்பு மாவட்ட தலை­வர்கள் கடும் முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

இதே­வேளை, இது குறித்து தகவல் அறிந்த பிர­தமர் நேற்று முன்­தினம் அதி­காலை 3 மணி­ய­ளவில் சம்­பந்­தப்­பட்ட நபரின் பெயரை வேட்பாளர் பட் டியலில் இருந்து நீக்கியுள்ளதாக  தெரிவிக்கப் பட்டுள்ளது.