வடக்கின் ஊடாக தொடரும் கஞ்சா கடத்தல்: நடப்­பது என்ன....?

Published By: Robert

23 Dec, 2017 | 10:02 AM
image

யுத்தம் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் வடக்­கிற்­கான பொரு­ளா­தார தடைகள் ஏற்­பட்ட போது இந்­தி­யாவில் இருந்தே பெரு­ம­ள­வான பொருட்கள் கடல் வழி­யாக கொண்டு வரப்­பட்­டன. மண்­ணெண்ணெய், கோதுமை மா, பற்­ற­ரிகள், பெற்றோல் என பல பொருட்கள் கடல் ஊடா­கவே பரி­மாற்­றப்­பட்­டன. கடல் வழி­யாக பலர் இந்­தி­யா­வுக்கு சென்று வரு­வதும், இடம்­பெ­யர்ந்து செல்­வதும் சர்வ சாதா­ர­ண­மாக இடம்­பெற்­றது. ஆனால் அந்த காலப்­ப­கு­தியில் கூட வடக்­கிற்கு போதைப்பொரு­ளான கஞ்சா கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. 

அதனைப் பயன்­ப­டுத்­துப­வர்­களும் சொல்லக் கூடிய வகையில் வடக்கில் இருக்கவில்லை. இறுக்கமாகவும், கட்டுக் கோப்­பு­டனும் இருந்த தமிழ் சமூகம் இன்று என்ன நிலையில் நிற்­கின்­றது என்ற கேள்வி எழு­கி­றது. தமிழ் மக்­களின் கலா­சார பூமி­யாக கரு­தப்­ப­டு­கின்ற யாழ்ப்­பா­ணத்­திலும் வடக்கின் ஏனைய மாவட்­டங்­க­ளிலும் நாளாந்தம் கேரளா கஞ்சா பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­ப­டு­வது என்­பது தினமும் பத்­தி­ரிகைச் செய்­தி­க­ளா­கி­விட்­டன. 

வட­ப­கு­தியில் யாழ்ப்­பாணம், மன்னார் ஆகிய கடற் பகு­தி­க­ளூ­டாக கேரளா கஞ்சா வந்து சேரு­கின்­றது. அங்­கி­ருந்து நாட்டின் ஏனைய பகு­தி­க­ளுக்கு அவை வியா­பா­ரத்­திற்­காக கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன. கேரளா கஞ்சா பாவனை மற்றும் போதை­வஸ்து பாவனை என்­பது இலங்­கையில் தற்­போது ஏற்­பட்­ட­தொன்­றல்ல. நீண்­ட­கா­ல­மாக இத­னுடன் தொடர்பு பட்ட குழுக்கள் தென்­ப­கு­தியில் இயங்கி வரு­கின்­றன. ஆனால், வட­ப­கு­தியில் தற்­போது  தான் கேரளா கஞ்­சாவின் வருகை அதி­க­ரித்து இருக்­கின்­றது. இலங்கை மீன­வர்கள் இந்­திய கடல் எல்­லையை தாண்­டு­கின்ற போதும், இந்­திய மீன­வர்கள் இலங்கை கடல்  எல்­லையை தாண்­டு­கின்ற போதும் கைது செய்யும் இரு நாட்டு கடற்­ப­டை­களும் கேரளா கஞ்­சாவை பெரி­ய­ளவில் பிடிப்­ப­தாக தெரி­ய­வில்லை. இந்­திய கட­லோர காவல்­படை, இந்­திய கடற்­படை, இலங்கைக் கடற்­படை ஆகி­ய­வற்றின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டே கேரளா கஞ்சா வடக்கின் கரையை அடை­கி­றது. இந்த நாட்டில் 30 வரு­ட­மாக நில­விய போரை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்கு பங்­காற்­றிய கடற்­ப­டை­யா­லேயே கேரளா கஞ்­சாவின் வரு­கையை கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை என்றால் கொஞ்சம் சிந்­திக்க வேண்­டிய விடயம் தான்.

இந்­தி­யாவில் இருந்து வரு­கின்ற போது ஒரு­கிலோ அளவில் கேரளா கஞ்­சாவை பிரித்து எடுத்து அவற்றை நீர் புகா­த­படி பொலித்தீன் பைகளில் போட்டு பொதி செய்து பட­கு­களின் அடிப்­ப­கு­தி­யுடன் நீருக்குள் மறைத்துக் கொண்டு வரு­கி­றார்கள். வடக்கின் கரையை குறித்த படகு அடை­வ­தற்கு முன்னர் மோட்டார் சைக்­கிளில் வலம் வரும் சில இளை­ஞர்கள் கடற்­கரை மற்றும் அத­னை­யண்­டிய பகு­தியின் பாது­காப்பை கண்­கா­ணித்து தகவல் வழங்க கரையை அடையும் படகில் இருந்து கேரளா கஞ்சா பொதிகள் கரையை நோக்கி வீசப்­ப­டு­கி­றது. அதன் பின் அந்த படகு சென்று விட அதனை பெறு­வ­தற்­காக தயா­ராக இருந்த குழு அதனை எடுத்து வாய்க்­கால்கள், புதர்கள் என எவரும் இல­குவில் சந்­தேகம் அடை­யாத மற்றும் மக்கள் செல்­லாத பகு­தி­களில் மறைத்து வைத்து விட்டு கட்டம் கட்­ட­மாக எடுத்து வாக­னங்­களில் வேறு பகு­தி­க­ளுக்கு அனுப்­பு­கின்­றது. இதற்கு மோட்டார் சைக்கிள் தொடக்கம் சொகுசு வாக­னங்கள் வரை பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. 

இவ்­வாறு பொலிஸ் தரப்பு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 2009 ஆம் ஆண்டு மே மாதத்­துடன் ஆயுதப் போராட்டம் மௌனிக்­கப்­பட்ட பின்னர் கேரளா கஞ்­சாவின் வருகை என்­பது வடக்கில் அதி­க­ரித்­துள்­ளது. நாட்டின் ஜனா­தி­பதி தொடக்கம் சாதா­ரண பொது­மக்கள் வரை வடக்கில் போதைப்­பொருள் பாவனை மற்றும் வருகை தொடர்பில் பேசும் அள­விற்கு இந்த நிலைமை காணப்­ப­டு­கின்­றது.  உரி­மைக்­காக போரா­டிய இனம் இன்று ஆயுத ரீதி­யாக தோற்­க­டிக்­கப்­பட்ட நிலையில் அந்த இனத்தின் இளை­ஞர்கள் மத்­தியில் மீண்டும் போராட்ட எண்ணம் ஏற்­படக் கூடாது என்­ப­தற்­கான ஒரு திசை திருப்பல் முயற்­சி­யா­கவே கேரளா கஞ்சா பாவ­னையை ஊக்­கு­விக்கும் செயற்­பா­டுகள் திரை­ம­றைவில் நடை­பெ­று­வ­தாக பலரும் சந்­தேகம் வெளி­யிட்­டுள்­ளனர். இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு இந்­திய கடற்­ப­டையும்  துணை போகின்­றதா என்ற கேள்வி எழு­கின்­றது. 

இலங்­கையில் வடக்கைப் பொறுத்­த­வரை ஏனைய மாகா­ணங்­களை விட பெரு­ம­ளவு இரா­ணுவம் குவிக்­கப்­பட்­டுள்­ளது. ஒன்­றரை லட்­சத்­துக்கு மேற்­பட்ட இரா­ணு­வத்­தினர் குவிக்­கப்­பட்­டுள்­ள­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் தெரி­வித்­தி­ருக்­கிறார். இது தவிர, முழத்­திற்கு முழம் பொலிஸ், புல­னாய்­வுப்­பி­ரிவு என வட­ப­கு­தியில் பாது­காப்புத் தரப்பைச் சேர்ந்­த­வர்கள் பெரு­ம­ளவில் நிலை கொண்­டுள்ள போதும் கேரளா கஞ்­சாவை கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. பொலிஸாரால் அவ்வப் போது கேரளா கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டா­லும் நாளாந்தம் அது இந்­தி­யாவில் இருந்து வந்து கொண்டே இருக்­கி­றது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இலங்கை மற்றும் இந்­தியா ஆகிய நாடுகள் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­திய போதும் அதனை கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலையே தொடர்­கின்­றது. 

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் இதன் பின்­ன­ணியில் பல­மா­ன­தொரு சக்தி உள்­ளது என்ற சந்­தேகம் எல்லோர் மனங்­க­ளிலும் எழு­கி­றது. அது தவிர்க்க முடி­யா­ததும் கூட. இது தவிர, வடக்கு இளை­ஞர்கள் மத்­தியில் உள்ள சில பிரச்சி­னை­களும், வசதி வாய்ப்­புக்­களும் கேரளா கஞ்சா பாவ­னையை தூண்­டு­வ­தாக அமை­கி­றது.  அதி­ந­வீன தொடர்பு சாத­னங்­களின் வருகை, வெளி­நா­டு­களில் இருந்து வீட்டில் இருக்கும் இளை­ஞர்­க­ளுக்கு வழங்­கப்­படும் அள­வுக்­க­தி­க­மான பணம், அதி­க­ரித்த வேலை இல்லாப் பிரச்சினை என்­பன இளை­ஞர்­களை தவ­றான வழியில் இட்டுச் செல்­கின்­றது. இவ்­வா­றான இளை­ஞர்­களே கேரளா கஞ்சா விற்­ப­னை­யிலும் பாவ­னை­யிலும் ஈடு­ப­டு­கின்­றனர். வடக்கைப் பொறுத்­த­வரை போதைப் பொருள் பாவனை இளை­ஞர்கள் மத்­தியில் பெரி­ய­ளவில் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை. மதுப்­பா­வனை என்­பது உள்ள போதும் தென்­ப­கு­தி­யுடன் ஒப்­பி­டு­கின்ற போது கேரளா கஞ்சா பாவனை அதிகம் என கூற­மு­டி­யாது. இருப்­பினும் வடக்­கிற்கு கடத்­தப்­படும் கேரளா கஞ்சா ஏனைய பகு­தி­க­ளுக்கு பரி­மாற்­றப்­ப­டு­கின்­றது. 

வட­மா­கா­ணத்தைப் பொறுத்­த­வரை கல்விப் பொது­ சா­தா­ரண தரப்­ப­ரீட்­சைக்கு தோற்­றும்­மா­ண­வர்­களில் யுத்­தம்­ மு­டி­வ­டைந்த 2009 தொடக்கம் 2015 வரை முறையே 55.71, 56.93, 54.26, 59.99, 65.33, 64.19, 60.38 வீத­மான மாண­வர்­களே சித்­தி­பெ­று­கின்­றனர். ஏனைய மாண­வர்கள் பாட­சாலை கல்­வியை இடை­நி­றுத்­தி­ய­வர்­க­ளாக வீடு­க­ளி­லேயே நிற்­கின்­றனர். அதேபோல், உயர்­தரம் கற்கும் மாண­வர்­களில் நாடளா­விய ரீதியில் சுமார் மூன்று இலட்சம் பேர் தோற்­று­கின்ற போதும் 65 ஆயிரம் பேர் வரையில் பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்கு விண்­ணப்­பித்து 28 ஆயிரம் வரை­யி­லான மாண­வர்­களே பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெறு­கின்­றனர். 

ஏனைய மாண­வர்­க­ளுக்­கான கல்வி வாய்ப்பு வசதி, தொழில் துறை என்­பன வடக்கில் முறை­யாக இல்­லாத நிலையே உள்­ளது. இவ்­வா­றான மாண­வர்­க­ளுக்­கான தொழில் பயிற்­சி­களை அது சார்ந்த கல்­லூ­ரிகள், தொழில் பயிற்சி அதி­கார சபைகள் ஊடாக வழங்­கப்­ப­டு­கின்ற போதும் அதில் இளை­ஞர்கள் விரும்பிச் சென்று கற்கக் கூடிய நிலை­மைகள் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. இதனால் பல இளை­ஞர்கள் சாதா­ர­ண­தரம், உயர்­த­ரத்தின் பின் என்ன செய்­வது என்று தெரி­யாத நிலை­யி­லேயே உள்­ளனர். இதன்­கா­ர­ண­மாக பல இளை­ஞர்கள் தவ­றான பழக்கங்­களில் ஈடு­படக் கூடிய நிலை­மை­களும் தோன்­றி­யுள்­ளது. வடக்கில் கேரளா கஞ்சா கைப்­பற்­றப்­ப­டு­வ­தற்கும், அதனை இளை­ஞர்கள் பயன்­ப­டுத்­து­வ­தற்கும் இந்த கல்­விசார் பிரச்சினையும் ஒரு காரணம் என்றே கரு­த­வேண்­டி­யுள்­ளது. ஒரு நப­ரிடம் இருந்து கேரளா கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டதும் அத­னு­ட­னேயே பொலி­ஸாரின் விசா­ர­ணையும், கைதும் நின்று விடு­கி­றது. அந்த நபர் எங்­கி­ருந்து அதைப் பெற்றார். எங்கு கொண்டு செல்­கின்றார். அத­னுடன் தொடர்பு பட்­ட­வர்கள் யார் என்ற அடிப்­ப­டை­யி­லான விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக தெரி­ய­வில்லை. 

அவ்­வாறு இடம்­பெற்று அத­னுடன் தொடர்­பு­டைய பெரிய வலைப்­பின்னல் நபர்கள் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் பதி­வுகள் இல்லை. ஆக, பொலிஸ் விசா­ர­ணைகள் கூட கஞ்சா கடத்­தலை முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்கும் வகையில் வடக்கில் இடம்­பெ­ற­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் மக்கள் மத்­தியில் உள்­ளது. இதுவும் பல்­வேறு சந்­தே­கங்­க­ளையும் கேள்­வி­யையும் எழுப்பியிருக்கிறது.

 வடபகுதியில் இடம்பெறுகின்ற பல வன்முறைகளுக்கும், விரும்பத் தகாத செயற்பாடுகளுக்கும் கேரளா கஞ்சாவின் பாவனையும் ஒரு காரணம் என்பதை எவரும் மறுத்து விடமுடியாது. இருப்பினும் கேரளா கஞ்சாவை கட்டுப்படுத்துவதற்கு நீதித்துறை மற்றும் பொலிஸார் மட்டும் நடவடிக்கை எடுப்பதால் வெற்றி பெறப்போவதில்லை. இளைஞர்களுக்கான முறையான கல்வி முறை, தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். 

ஒவ்வொரு கிராமமும் அங்குள்ள கிராம மட்ட அமைப்புக்களும் தமது கிராமம் தொடர்பில் விழிப்படைய வேண்டும். போதை மூலம் ஒரு சமூகத்தை அழித்து இன்னொரு சமூகம் வாழலாம் என்பது தவறான சிந்தனையே. ஒவ்வொருவரும் தமது பிரதேசத்தையும், சமூகத்தையும் பாதுகாக்க முன்வருவதன் மூலமே கேரளா கஞ்சா பாவனையை கட்டுப்படுத்த முடியும் என்பதே உண்மை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22