சிசுக்களை சிதைக்கும் ஸிகா வைரஸ்

Published By: Robert

07 Feb, 2016 | 01:59 PM
image

மனிதன் இயற்­கையை வெற்­றி­கொண்­டுள்­ள­தாகக் கூறிக்­கொண்­டாலும் இயற்கை அவ்­வப்­போது மனித செயற்­பாட்டை திக்­கு­முக்­காடச் செய்யும் வகையில் தனது மேதா வித் தன்­மையை வெளிக்­காட்ட பின்­ நிற்­ப­ தில்லை. அதற்கிணங்க பல தொற்­று ­நோய் கள் தாக்கம் செலுத்தி பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உயிர்­க­ளையும் காவு­கொள்­கின்­றன.

அதன் பின்­ன­ணி­யா­கவே தற்­போது ஸிகா வைரஸ் தொற்று உலக நாடு­களை அச்­சு­றுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றது. அதி­க­ள­வான உயிர்ச் சேதங்­களை ஏற்­ப­டுத்­தா­வி­டினும், பரம்­பரை இடை­வெ­ளியை ஏற்­ப­டுத்தும் தன்­மை­யினை ஸிகா வைரஸ் கொண்­டுள்­ளது. குறித்த வைரஸ் சர்­வ­தேச ரீதியில் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­த­னா­லேயே உலக சுகா­தார ஸ்தாபனம் சர்­வ­தேச சுகா­தார அவ­ச­ர­கால நிலையை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஸிகா வைரஸின் தோற்றம் ஸிகா வைர­ஸா­னது ஆரம்­பத்தில் குரங்­கு­க­ளி­லேயே கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. உகண்­டா­வி­லுள்ள வெப்ப வலய காடொன்றின் பெயரே ஸிகா­வாகும். 1947ஆம் ஆண்டு ஸிகா காட்­டிலுள்ள குரங்­கொன்­றி­லேயே குறித்த வைரஸ் இனங்­கா­ணப்­பட்­டது. ஆகவே, ஸிகா காட்­டி­லு ள்ள குரங்கில் இனங்­கா­ணப்­பட்­டதால் அந்த வைர­ஸுக்கு ஸிகா என்று பெயர் சூட்­டப்­பட்­டது.

எனினும், அந்த வைரஸ் 1954ஆம் ஆண் டில் நைஜீ­ரிய நாட்டைச் சேர்ந்த நப­ரொ­ரு­வரில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அதன் பின்னர் 2007ஆம் ஆண்டு மைக்ரோ­னே­ஷி­யா­விலும் 2013ஆம் ஆண்டு பொலி­னே­யா­விலும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அப்­போ­தெல்லாம் குறித்த வைரஸின் தீவிரத் தன்மை உண­ரப்­ப­ட­வில்லை. இருந்­த­போ­திலும், 2015ஆம் ஆண்டில் பிரே­சிலில் ஸிகா பர­வி­ய­போதே உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் வித­மாக தீவிரத் தன்மை உண­ரப்­பட்­டுள்­ளது.

தீவிரத் தன்மை டெங்கு நோயைப்­போன்று ஸிகா வைரஸ் தொடர்பில் பீதி கொள்ளத் தேவை­யில்லை. அது டெங்கைப் போன்று பார­தூ­ர­மான தன்மை கொண்­ட­து­மல்ல. உயி­ரா­பத்தை ஏற்­ப­டுத் தும் உயிர்­கொல்­லி­யாக இல்­லா­த­போதும் ஊன­முற்ற பரம்­ப­ரை­யொன்­றினை உருவாக் கும் வல்­லமை கொண்­டது. குறித்த வைர ஸின் தாக்­கத்­தினால் பிறக்­க­வி­ருக்கும் குழந்­தை­களே பெரிதும் பாதிக்­கப்­ப­டு­கின்றனர்.

அதா­வது கரு­வுற்­றி­ருக்கும் தாயொ­ரு­வரை ஸிகா வைரஸ் தாக்கும் போது தாய்க்கு பாரி­ய­ள­வி­லான விப­ரீ­தங்கள் ஏற்­ப­டு­வ­தில்லை. எனினும், கருவில் உள்ள சிசுக்­களை அது வெகு­வாக பாதிக்­கி­றது.

அதனால் பிறக்கும் குழந்­தைகள் உருவ அமைப்பில் சிறிய தலை­க­ளுடனும் மூளை வளர்ச்சி குன்­றிய நிலை­யி­லுமே பிறக்­கின்­றன. கரு­வி­லி­ருக்கும் குழந்தை­களைப் பாதிப் ­பது தெரிய வந்த பின்­னரே ஸிகாவின் பாத கத் தன்மை பற்றி உல­க­ளா­விய ரீதியில் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

பிரேஸில் நாட்டில் கடந்த வரு­டத்தில் ஸிகா வைரஸ் தாக்­கத்­திற்­குள்­ளான தாய்­மார்­க­ளுக்கு பிறந்த 3,893 குழந்­தை­களின் தலை சிறி­தாகவும் மூளை­வ­ளர்ச்சி குன்றிய நிலை­யிலும் பிறந்­துள்­ளன. அதேபோல் லத்தீன் அமெ­ரிக்­காவில் சுமார் 15,000 குழந்­தைகள் குறித்த நோய் தாக்­கத்­துடன் பிறந்­துள்­ளன.

பாரி­ய­ள­வான உயி­ரா­பத்தை ஏற்­ப­டுத்­தாத குறித்த நோய்த்­தாக்­கத்தின் அச்­சு­றுத்தல் தொடர்பில் அதி­க­ளவில் பீதி கொள்­வ­தற்கு, குழந்­தை­களின் விவ­கா­ரமே பிர­தான இடம் வகிக்­கின்­றது.

தொற்­றுக்­கான அறி­குறி டெங்கு, சிகன்­குன்யா, மஞ்சள் காய்ச்சல் உள்­ளிட்ட நோய்க்கிரு­மி­களை காவிச் செல் லும் ஈடிஸ் ஈஜிப்ட் நுளம்­பு­களே ஸிகா வைர­ஸையும் காவு­கின்­றன.

எனவே டெங்கு நோயின் அறி­கு­றி­க­ளையே ஸிகா தொற்­றுள்­ள­வர்­க­ளிலும் அவ­தா­னிக்க முடியும். மித­மான காய்ச்சல், உடம்பில் ஒரு­வித அரிப்பு ஏற்­படல், மூட்டு வலி, தலை­வலி, கண் வெண்­ப­டலம் சிவப்பு நிற­மாதல் என்பன ஸிகா தொற்­றி­ய­மைக்­கான அறி­கு­றி­க­ளா கும். எனினும், ஸிகா தொற்­றி­யுள்ள அனை­வ­ருக் கும் நோய் ஏற்­படும் எனவும் கூற முடி­யாது.

பாலியல் உறவு மூலம் பர­வுமா?

ஸிகா வைரஸ் ஒரு­வ­ரி­லி­ருந்து இன்­னொ­ரு­வ­ருக்கு பரவும் தன்மை கொண்ட தொற்று நோய் என சில தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. எனினும் பாலியல் உறவின் மூலம் ஸிகா பர­வி­ய­தற்­கான உறு­தி­யான சான்­றுகள் இல்லை என ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்­டது. இருந்தபோதிலும், பாலியல் தொடர்பின் மூலம் ஸிகா வைரஸ் தொற்­றிய நபர் ஒருவர் அமெ­ரிக்க டெக்ஸாஸ் மாநி­லத்தில் இனங்­கா­ணப்­பட்­டுள்ளார்.

டலஸ் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த குறித்த நபர் ஸிகா தொற்­றுள்ள தன்­னு­டைய வாழ்க்­கைத்­து­ணை­யுடன் பாலியல் உறவு கொண்­ட­தனால் அவ­ருக்கு ஸிகா தொற்­றி­யுள்­ள­தாக அந்­நாட்டு நோய் தடுப்பு நிலையம் தெரி­வித்­துள்­ளது.

மேலும் பாலியல் மூலம் ஸிகா தொற்று ஏற்­பட்­டுள்ள குறித்த நபரின் வாழ்க்கைத் துணை ஸிகா வைரஸ் தொற்­றி­யுள்ள பிராந்­தி­யங்­க­ளுக்கு பயணம் செய்­த­தனால் அவ­ருக்கு தொற்று ஏற்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. எனினும், பாலியல் உறவின் மூலம் தொற்­றுக்­குள்­ளான நபர் ஸிகா தொற்­றுள்ள பிராந்­தி­யங்­க­ளுக்கு பய­ணிக்­க­வில்லை. எனவே அவ­ருக்கு பாலியல் உறவு மூலம் ஸிகா தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

மேலும் வைரஸ் தொற்­றுள்­ள­வரின் விந்­த­ணுவில் ஸிகா வைரஸ் தங்­கி­யி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. அத­னா­லேயே தொற்­றுள்ள ஒருவர் ஏனை­யோ­ருடன் பாலியல் ரீதி­யி­லான உறவை வைத்­தி­ருக்கும்போது மற்­ற­வ­ருக்கும் அது பரவும் அபாயம் உள்­ளது. இது தொடர்பில் அமெ­ரிக்க தொற்­று நோய் தடுப்பு நிவா­ரண சிகிச்சை பிரிவின் பிரதிப் பணிப்­பாளர் சூஷான் 'வைரஸ் தொற்­றுள்ள நப­ரொ­ரு­வரின் விந்­த­ணுவை பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தி­ய­போது அதில் ஸிகா வைரஸ் இருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது' எனத் தெரி­வித்­துள்ளார்.

மேலும் இரத்­தத்­தாலும் பர­வக்­கூ­டிய வாய் ப்பு உள்­ளது. ஆயினும், அது குறைந்­த­ள­வி­லேயே சாத்­தி­ய­மா­கலாம். எனினும் ஸிகா வைரஸ் தொற்­றுள்ள நாடு­க­ளுக்கு பயணம் மேற்­கொண்டு தாய் நாடு திரும்­பு­ப­வர்கள் இரத்த தானம் செய்ய முற்­ப­டு­வார்­க­ளாயின் அவர்கள் குறைந்­தது 28 நாட்­களின் பின்­னரே அதனைச் செய்ய முடியும் என அமெ­ரிக்க செஞ்­சி­லுவைச் சங்கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

கர்ப்­பிணித் தாய்­மார்­க­ளி­லி­ருந்து கருவி லூல்ல சிசுக்களை பாதிக்­கின்ற போதிலும் தாய்ப்­பா­லி­னூ­டாக குழந்­தை­க­ளுக்கு ஸிகா வைரஸ் பர­வி­ய­தாக இது­வ­ரையில் பதி­வா­க­வில்லை.

நிவா­ரணம் ஸிகா வைரஸ் தொற்­றி­யுள்­ள­வர்­க­ளுக்கு நிவா­ரணம் அளிக்கும் வகையிலான தடுப்பு மருந்து இதுவரையில் பாவனையில் இல்லை. வரும் முன் காப்­பதே தொற்­றி­லி­ருந்து பாது­காத்­துக்­கொள்­வ­தற்­கான பிர­தான வழி­வ கை­யாகும்.

இருந்தபோதிலும் இந்திய நிறுவனம் ஒன்று ஸிகா வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறித்த மருந்தின் பரீட்சார்த்த நடவடிக் கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. எனவே விரைவில் அந்த தடுப்பு மருந்து பாவனைக்கு வரும் எனவும் அந்நிறு வனத் தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

உயி­ரா­பத்தை ஏற்­ப­டுத்தும் தன்­மை­க ளைக் கொண்­டி­ராத ஸிகா வைரஸ் தொற்­றுக்­குள்­ளாகி நோய் வாய்ப்­பட்டால், அது ஒரு வார காலம் காலம் நீடிப்­ப­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன.

அதி­க­மாக நீர் அருந்­துதல், ஓய்­வெ­டுத்தல் மூலம் நோயின் தீவி­ரத்தை ஓர­ளவு கட்­டுப்­ப­டுத்­தலாம். எனினும், வைரஸைக் காவிச் செல்லும் நுளம்­புகள் பர­வாமல் சூழலை சுத்­த­மாக வைத்­துக்­கொள்­வதே சிறந்த வழி­யாகும். மேலும் நுளம்புத் தாக்­கத்­தி­லி­ருந்து தப்­ பிக்க அவ­தா­ன­மாக நடந்­து­கொள்ள வேண் டும். அத்­துடன், ஸிகா வைரஸைப் பரப்பும் நுளம்­புகள் பகல் பொழு­து­களில் தீவிர செய ற்­றிறன் கொண்­டவை. எனவே, பகல் வேளை­களில் உடம்பை மறைக்கும் வகையில் ஆடை அணி­வ­த­னூ­டாக நுளம்­புக்­க­டி­யி­லி­ருந்து ஓர­ளவு தப்­பித்­துக்­கொள்ளலாம். இலங்­கையில் ஸிகா பரவும் அபாயம் உள்­ளதா?

ஸிகா வைரஸ் கடந்த வரு­டத்தின் இறு­திப்­ப­கு­தி­யி­லி­ருந்து வெகு­வாக பரவி வரு­கி­றது. பொலி­வியா, ஈக்­கு­வடோர், கயானா, பிரசில், கொம்­பியா, எல்­சல்­வடோர், கௌத­ மாலா, மெக்­சிக்கோ, பனாமா, பரா­குவே, வெனி­சு­வெலா, ஹொன்­டுராஸ், சூரினாம், பாபடோஸ், ஹெய்டி, பிரெஞ் கைனா, குவா துலூப்பே, மார்டினிக், செய்ன்ட் மார்டின், புயடோரிகா போன்ற நாடு­களில் தாக்கம் அதி­க­ளவில் உண­ரப்­பட்­டுள்­ளது.

எனினும், குறித்த வைரஸ் இலங்­கையில் பர­வி­யுள்­ள­தாக இது­வ­ரையில் இனங்­கா­ ணப்­ ப­ட­வில்லை. உலக நாடு­களில் பாரி­ய­ள­வான பய­முறு த்­தலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளதால் சுகா­தார அமைச்சு இது தொடர்பில் அதிக கவனம் செலுத்­தி­யுள்­ளது. ஆகவே, இலங்­கையில் ஸிகா பர­வு­வ­தனைத் தடுப்­ப­தற்­கான சகல ஏற்­பா­டு­க­ளையும் மேற்­கொண்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

மேலும், ஸிகா இனங்­கா­ணப்­பட்­டுள்ள நாடுக­ளி­லி­ருந்து இலங்­கைக்கு வரும் பிர­யா ­ணி­களை விமான நிலை­யத்தில் விசேட பரி­சோ­தனை செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. ஆகவே, இது தொடர்பில் வீணாக பீதி கொள்ளத் தேவை­யில்­லை­யெ­னவும் அவ்­வ­மைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இருந்­த­போ­திலும் ஸிகா வைரஸ் இலங்­கையில் பர­வு­வ­தற்­கான வாய்ப்­புள்­ள­தா­க வும் அது தொடர்பில் அவ­தா­ன­மான நடந்து கொள்­ளு­மாறும் அரச சிரேஷ்ட உயி­ரியல் விஞ்­ஞான உதவி அதி­காரி தெரி­வித்­துள் ளார். டெங்கு நோயை ஏற்­ப­டுத்தும் ஈடிஸ் ஈஜிப்ட் நுளம்­பு­களே ஸிகா வைர­ஸையும் காவிச் செல்­கின்­றன. எனவே ஈடிஸ் ஈஜிப்ட் நுளம்பு இனம் இலங்­கையில் ஏற்­க­னவே உள்­ளதால் ஸிகா வைரஸ் பரப்­வு­வ­தற்­கான அபாயம் இருப்­ப­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

ஸிகா ஏற்­ப­டுத்­தி­யுள்ள அதிர்­வ­லைகள் ஸிகா வைரஸ் விரை­வாகப் பரவி வரு­வ ­தனால் சர்­வ­தேச சுகா­தார ஸ்தாபனம் சர்­வ­தேச பொது சுகா­தார அவ­ச­ர­கால நிலையை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது. ஜெனீ­வாவில் நடை­பெற்ற சர்­வ­தேச உலக சுகா­தார ஒழுங்­கு­ப­டுத்தல் அவ­ச­ர­கால சபையின் கூட்­டத்­தின்­போதே இப்­பி­ர­க­டனம் அமுல்ப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. வைரஸ் தொற்றை கண்­ட­றிதல் மற்றும் தடுத்தல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­கா­கவே அவ­ச­ர­கால நிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மேலும், ஸிகா வைரஸ் விரை­வாகப் பரவி வரு­வ­தனால் சில நாடுகள் குழந்தை பெற்­றுக்­கொள்­வதைத் தவிர்த்துக் கொள்­ளு­மாறு வேண்­டி­யுள்­ளன. அதற்­கி­ணங்க எல்­சல்­வ டோர் நாட்டு அர­சாங்கம் அங்­குள்ள பெண்­களை இரு வருட காலத்­திற்கு கர்ப்பம் தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும், அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அந்நாட் டில் செயற்படும் பெண்களின் உரிமைக ளைப் பாதுகாக்கும் அமைப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது. அதுமாத்திரமன்றி, பிரேஸில் ஸிகா வைரஸ் தொற்றுள்ள பெண்கள் தமக்கு கருக்கலைப்பு செய்வதற்கான அனுமதி வழங் குமாறு கோரி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை, பிரேஸில் ரியோ டி ஜெனிரோ நகரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம் பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. எனவே, இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் ஸிகா வைரஸ் தாக்கம் செலுத்தும் அபாயம் உள்ள தாகவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையினால் ஒலிம்பிப் போட்டிகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவ டையலாம் எனவும் அஞ்சப்படுகிறது. எனி னும், ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவ தற்காக வருகை தரும் வீரர்கள் மற்றும் பார் வையாளர்களுக்கு ஸிகாவிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஆலோசனை வழங்கவுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சபையின் தலைவர் தோமஸ் பச் தெரிவித் துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29